Total Pageviews

Tuesday, August 25, 2026

வாழை இலை பரோட்டா !

 வாழை இலை பரோட்டா - சேலம்…

  • நம் மக்களுக்கு பரோட்டா என்றால் கொண்டட்டம்தான். எந்த ஊருக்குப் போனாலும் தெருவுக்கு நான்கு பரோட்டா கடைகள்.
  • வழக்கமான பரோட்டாவைத் தின்று அலுத்தவர்களுக்கு இலை பரோட்டா, ஸ்பெஷல்.
  • சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கம், அஞ்சல் நிலையத்துக்கு எதிரில் இருக்கிறது அசோக் பரோட்டா கடை.
  • இலை பரோட்டா' சாப்பிட இந்த உணவகம் நல்ல சாய்ஸ்.
  • இலை பரோட்டா சாப்பிட விரும்புபவர்கள் குறைந்தது 20 நிமிடமாவது உட்கார்ந்திருக்க வேண்டும்.
  • அந்த இடைவெளியில் சாப்பிட, கல்டா பரோட்டா, கோதுமை பரோட்டோ என சில வெரைட்டியான பரோட்டா வகைகள் வைத்திருக்கிறார்கள்.
  • கல்டா பரோட்டாவை முறுக வேகவைத்து, பிய்த்துப்போட்டு குழம்பில் ஊறவைத்துத் தருகிறார்கள்.

வாழை இலை பரோட்டா

  • இலை பரோட்டா ஒரு லேயர் வெரைட்டி.
  • அகன்ற வாலையிழையை எடுத்து, முதலில் மட்டன் குழம்பை ஊற்றி விரவுகிறார்கள்.
  • அது மேலே பூ மாதிரி ஒரு பரோட்டா. அதற்குமேல் எலும்பில்லாத சிக்கனை கிரேவியோடு அள்ளி வைத்துப் பரப்புகிறார்கள்.
  • மேலே வெங்காயம், மிளகுத்தூள், மல்லித்தழை தூவி அதற்கு மேல் ஒரு பரோட்டா வைத்து தளும்ப சிக்கன் குழம்பு ஊற்றுகிறார்கள்.
  • அப்படியே இலையை சதுரமாக மடித்துக் கட்டி பரோட்டா கல்லில் வைத்து பத்து முதல் பதினைந்து நிமிடம் வேக வைக்கிறார்கள்.
  • வாழையிலையும், பரோட்டாவும் சேர்ந்து வெளிவருகிற சூப்பரான வாசனைதான் வெந்ததற்கு அடையாளம்.
  • அப்படியே பாதி கருகிய இலையோடு சூடுபறக்க கொண்டு வந்து வைக்கிறார்கள்.
  • இலையைப் பிரித்தால், பஞ்சு மாதிரி குழம்பில் ஊறி வெந்திருக்கிறது பரோட்டா. சிக்கன், மட்டன் குழம்புகளில் கலந்து வெரைட்டியான டேஸ்ட்.

டிஆர்.மகாலிங்கம்!

 

TR.Mahalingam

பல முக்கியமான நடிகர்கள் தங்களது திரைவாழ்க்கையில் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தனர். அதெல்லாம் அவர்கள் திரைப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்ததுக்குப் பின்னால்தான் நடந்தது என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் மிக முக்கியமாக சுட்டிக்காட்டுவது ஒரு காலகட்டத்துல ஓகோ என்று இருந்த டிஆர்.மகாலிங்கத்தைப் பற்றித்தான்.

அவர் பிரபலமான கதாநாயகனாக ஒரு காலகட்டத்துல நடித்துக் கொண்டு இருந்தார். அப்போதுதான் நாம ஏன் சொந்தப்படம் ஆரம்பிக்கக்கூடாது என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றியது. உடனே தன்னோட மகன் சுகுமார் பேருல சுகுமார் புரொடக்ஷன்ஸ் என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். மச்ச ரேகா, மோகன சுந்தரம், சின்னத்துரை, விளையாட்டுப்பிள்ளை ஆகிய 4 படங்களைத் தயாரித்தார்.

அதற்குப் பின்னால் செல்வ செழிப்பிலே இருந்த அவர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தார் என்பதுதான் உண்மை. மனைவியின் கழுத்தில் இருந்த தாலியைக் கூட அடமானம் வைக்கக் கூடிய சூழல் தான் அவருக்கு இருந்தது. கையில பணம் இருந்தது. தயாரிப்பாளர் என்ற அந்தஸ்து இருந்தது.

எனக்கு தலை கால் புரியல. வீண் செலவிலே பணம் கரையத் தொடங்கியது. 12 கார்களில் பெட்ரோலைத் தண்ணீர் மாதிரி போட்டுப் பறந்து கொண்டு இருந்தேன். எல்லா ஓட்டல்களிலும் அறைகள் என்னோட பேர்ல புக்காகி இருந்தன. இதுல மிகப்பெரிய சோகம் என்னன்னா நான் படத்தயாரிப்பாளர் ஆன உடனே, நான் தான் தயாரிப்பாளர் ஆகிட்டேனே என்று பல தயாரிப்பாளர்கள் தன்னோட படங்களுக்கு என்னை ஒப்பந்தம் செய்வதை நிறுத்தி விட்டார்கள்.

இப்படி நான் இழந்த செல்வத்தை எல்லாம் எனக்கு மீட்டுக் கொடுத்ததுன்னா அது என்னோட மாமனார்தான். அவர் இல்லன்னா என்னோட வாழ்க்கை எப்படி திசை மாறி இருக்கும் என்று என்னால சொல்ல முடியாது என ஒரு பத்திரிகை பேட்டியிலே பதிவு செய்துள்ளார் டிஆர்.மகாலிங்கம்.

இளையராஜா !

 

1976ல் தமிழ்த்திரை உலகில் காலடி எடுத்து வைத்தார் இசைஞானி இளையராஜா. 1980ல் அவர் இசை அமைத்த 100வது படம் மூடுபனி. 

1987ல் அவர் இசை அமைத்த நாயகன் 400வது படம். 

1990ல் வெளியான அஞ்சலி அவருக்கு 500வது படம். 

1994ல் ராசையா அவருக்கு 700வது படம். 

2011ல் வெளியான தாரை தப்பட்டை தான் அவரது 1000மாவது படம்.

இது மட்டுமா...? இது போக பூஜை போட்டு கைவிடப்பட்ட படங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. சில பொருளாதார பிரச்சனையால் ரிலீஸ் ஆகாமலும் உள்ளன. அந்த வகையில் 1000 படங்கள், 7000 பாடல்கள், 1000 படங்களின் பின்னணி இசை, ஒரு படத்துக்கு 2.30 மணி நேரம் என்றால் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

தலை சுற்றுகிறதல்லவா? இத்தனைக்கும் அப்போது எல்லாம் லைவ் ஆர்க்கெஸ்ட்ரா தான். கணினி மயம் கிடையாது. அந்தவகையில் சூப்பர்ஹிட்டான பல பாடல்களைக் கொடுத்தவர் இளையராஜா என்றால் மிகையில்லை.

இந்தப் பொங்கலையொட்டி ஜனவரி 17ல் நெல்லையில் இசைக்கச்சேரியை நடத்தினார். இந்த மாதம் 26ம் தேதி லண்டன் சென்று சிம்பொனியை இசைக்க உள்ளார். 1976 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் திரைப்பயணம் செய்து வருகிறார்.

83 வயதிலும் கூட இளையராஜா இன்னும் சோர்வே இல்லாமல் சுறுசுறுப்பாக இசை அமைத்து வருகிறார் என்றால் ஆச்சரியம்தான்.

பாட்டி சொல்லைத் தட்டாதே வசனம் சித்ராலயா கோபு !

Paatti sollai thattathe

ஒரு திருமண பத்திரிகை ஒரு திரைப்படத்துக்கான வாய்ப்பைப் பெற்றுத் தருமா? ஆனால் சித்ராலயா கோபுவுக்கு பெற்றுத் தந்தது. அந்த தரமான சம்பவம் என்னன்னு பாருங்க...

தன்னுடைய மகனின் திருமணத்துக்கு அழைப்பதற்காக ஏவிஎம்.சரவணனை சந்தித்தார் சித்ராயா கோபு. உங்க பையன் கல்யாணத்துக்கு நான் வராம இருப்பேனா என்று சித்ராலயா கோபுவிடம் சொன்ன சரவணன் உங்களைப் பார்த்த உடனே தான் நினைவுக்கு வருது. இப்ப நாங்க ஒரு நகைச்சுவை படம் எடுக்குறோம். அந்தப் படத்துக்கு நீங்கள் வசனம் எழுத முடியுமா என்று கோபுவை பார்த்துக் கேட்டார்.

எங்களுடைய வழக்கப்படி கல்யாணத்தில ஆண் வீட்டாருக்கு எந்த வேலையும் இருக்காது. எல்லாம் பெண் வீட்டாருடைய வேலைதான். அதனால நான் ப்ரீயா தான் இருப்பேன். தாராளமாக எழுதித் தருகிறேன் என்றார் சித்ராலயா கோபு. மறுநாளே தன்னை வந்து சந்திக்கும்படி ஏவிஎம் சரவணன் சொல்ல அவரை போய் சந்தித்தார் சித்ராலயா கோபு. ஏவிஎம் சரவணனை சித்ராலயா கோபு சந்தித்த போது அந்த அறையிலே ராஜசேகரும் இருந்தார்.

அடுத்து ஏவிஎம் நிறுவனத்துக்காக தான் இயக்கப் போகின்ற கதையை ராஜசேகர் சித்ராலயா கோபுவிடம் சொல்ல, இதே சாயல்ல நான் ஒரு டிராமாவை எழுதி இருக்கிறேன் என்று சொன்னார் சித்ராலயா கோபு. உங்களுடைய டிராமா இப்ப இவர் சொன் கதை இரண்டையும் இணைத்து நீங்களே இந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதிருங்க என்று ஏவிஎம்.சரவணன் சொல்ல உருவானதுதான் பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற திரைப்படம்.

அந்த படம் எப்படிப்பட்ட ஒரு வெற்றிப்படமாக அமைந்ததுன்னு எல்லாருக்கும் தெரிந்த விஷயம். 25 வாரத்தைக் கடந்து ஓடிய அந்தத் திரைப்படத்துக்கு வசனம் எழுதுகின்ற வாய்ப்பை எனக்கு பெற்றுத் தந்தது என்னுடைய மகனின் திருமணப் பத்திரிகை தான் என்று ஒரு பத்திரிகை பேட்டியில் சித்ராலயா கோபு தெரிவித்துள்ளார்.No photo description available.

ஹீரோவாக டி. ராஜேந்தர் நடித்த படம்தான் உயிருள்ளவரை உஷா!

 ரஜினிக்காக சொன்ன கதையில் அவர் நடிக்க மறுக்கவே, பின்னர் தானே ஹீரோவாக டி. ராஜேந்தர் நடித்த படம்தான் உயிருள்ளவரை உஷா.

 

  • 1980 இல் டி.ஆரின் முதல் படம் ஒரு தலை ராகம் வெளியாகி தமிழ்நாடே அதில் கட்டுண்டு கிடந்தது.
  • அதில் நாயகியின் தோழியாக நடித்தவர் உஷா.
  • அவரே தனது வாழ்க்கைத் துணைவி என அவரை 1982 இல் டி.ராஜேந்தர் திருமணம் செய்து கொண்டார்.
  • 1983 இல் டி.ஆர். இயக்கிய படத்தின் பெயர் உயிருள்ளவரை உஷா. தனது மனைவியின் பெயரில், அவர்மீதான காதலை வெளிப்படுத்தும் டைட்டில்.
  • இன்றுவரை அந்தத் தலைப்புக்கு எந்த குந்தகமும் ஏற்படாமல் இல்லறம் நடத்தி வருகிறார்.
  • உயிருள்ளவரை உஷா என்ற பெயரில் ஒன்பது எழுத்துக்கள் வரும்.
  • அதன் பிறகு தான் எடுத்த அனைத்துப் படங்களின் பெயரும் ஒன்பது எழுத்தில் வருவது போல் பார்த்துக் கொண்டார் டி.ஆர்.
  • தங்கைக்கோர் கீதம், உறவைக்காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், சாந்தி எனது சாந்தி, எங்க வீட்டு வேலன், ஒரு வசந்த கீதம், தாய் தங்கைப் பாசம், மோனிசா என் மோனலிசா, காதல் அழிவதில்லை என எல்லாமே ஒன்பது எழுத்து டைட்டில்.
  • அதுவரை தனது படங்களில் கேமியோ, கெளரவ வேடம், சிறிய காதபாத்திரத்தில் தோன்றி வந்த டி. ராஜேந்தர் ஹீரோவாக படம் முழுக்க தோன்றியது உயிருள்ள வரை உஷா படத்தில் தான்.
  • வழக்கமான தனது படங்களில் இயக்கம், எழுத்து பணிகள் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள் உள்பட இதர பொறுப்புகளை ஏற்று செய்து வந்த டி. ராஜேந்தர், இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பிலும் பட்டையை கிளப்பினார்.
  • அதுவரை தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கான இருந்த இலக்கணங்களை உடைத்தெறியும் விதமாக தாடியுடன் கூடிய லுக்கும், வித்தியாசமான பாடி லாங்குவேஜ் உடன் கூடிய நடிப்பையும் வெளிப்படுத்தி டி.ராஜேந்தர் ஸ்டைலை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
  • உயிருள்ள வரை உஷா படம் தான் டி. ராஜேந்தர், தஞ்சை சினி ஆர்ட்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் முறையாக தயாரித்த படமாகவும் அமைந்தது.
  • தனது காதலியின் பெயரையே படத்தின் டைட்டிலாக வைத்து டி. ராஜேந்தர் எடுத்திருந்த இந்த படத்தில் நடிகர் கங்கா, நளினி ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுகங்களாக தோன்றினர்.
  • அதேபோல் பிரம்மாண்ட செட் அமைப்பதில் டி.ஆர்., தனித்துவமானவர் என்கிற ஃபார்முலா தொடங்கியதும் இந்த படத்தில் தான்.
  • இந்த படத்தின் கதையை ரஜினியை மனதில் வைத்து டி. ராஜேந்தர் உருவாக்கியிருந்தாக கூறப்படும் நிலையில் அவர் நடிக்க முடியாமல் போயுள்ளது.
  • தனது காதலியின் நினைவாக எடுக்க நினைத்த படத்தில் வேறு ஹீரோவை நடிக்க வைப்பதற்கு பதிலாக தானே ஹீரோவாக தோன்றி சிறப்பான நடிப்பின் மூலம ரசிகர்களை கவர்ந்தார்.
  • படத்துக்கு டி.ராஜேந்தர் தான் பாடல் எழுதி இசையமைத்தார்.
  • மேகம் வந்து தாகம், இந்திரலோகத்து சுந்தரி, கட் அடிப்போம் போன்ற பாடல்கள் அந்த கால இளசுகளை தாளம் போட வைத்தது.
  • பாடகர் கே.ஜே. யேசுதாஸ் குரலில் வைகை கரை காற்றே நில்லு பாடல் காலத்தால் அழியாத மெலடியாக நிலைத்து நிற்கிறது.
  • படம் முடிந்து ரிலீசாவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்த போதிலும், வெளியான பின்னர் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது.
  • தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்த படம் அங்கும் ஹிட்டானது.
  • இதன் பின்னர் கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
  • 1980களில் வெளியாகி, தற்போது கல்ட் கிளாசிக் காதல் திரைப்படமாக மாறியிருக்கும் உயிருள்ள வரை உஷா வெளியாகி 41 ஆண்டுகள் ஆகிறது.
 

Monday, August 24, 2026

வெண்ணிற ஆடை மூர்த்தி!

 🌹வெண்ணிற ஆடை மூர்த்தி!

பேட்டி ஒன்றில்

🌹என் மனைவி மணிமாலா அப்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். இருந்தும் எந்தவித பந்தாவும் இன்றி இருந்தார். அவரிடம் பழக ஆரம்பித்த பின்பு ஒருநாள், "இப்படி அன்பும் பண்பும் அமையப்பெற்ற பெண் வாழ்க்கைத் துணையானால் எதிர்காலம் சிறப்பாக இருக்குமே'' என்று தோன்றியது. ஆனாலும் உடனே அதை வெளிப்படுத்தவில்லை. எங்களுக்குள் எந்தவித `ஈகோ'வும் இருந்ததில்லை. அதனால் "நாம் வாழ்வில் இணைந்தால் நன்றாக இருக்கும்'' என்று நான்தான் என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.

🌹மணிமாலா தரப்பிலும் என் மாதிரியான எண்ண ஓட்டம் இருந்ததால், பழக ஆரம்பித்த 5-வது வருடத்தில் எங்கள் திருமணம் இரு குடும்பத்தின் பரிபூரண சம்மதத்துடன் நடந்தது.

🌹சினிமா உலகில் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். தற்போது இரண்டு வருடங்களாக இவருடைய உடல் நிலை நடிப்பதற்கு ஒத்துப் போகாத காரணத்தினால் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று உள்ளேன்.

🌹எனக்கு மனோ என்ற ஒரு மகனும் உள்ளார். இவர் என்ஜீனியரிங் முடித்து அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் பணி செய்கிறார். இவருக்கும் திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான்

Prasanth

Srinivas

கவிஞர் வாலி ! பஞ்சு அருணாசலம் !

ஒருநாள்... கவிஞர் வாலி ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பஞ்சு அவர்களைப்

பார்த்து ‘என்னய்யா பஞ்சு... நீரே படம் தயாரிச்சு, நீரே பாட்டெல்லாம் எழுதிட்டா, எங்க பொழப்பு என்னாகறது?’ என்று கிண்டலாகக் கேட்டார் வாலி. ‘சரிண்ணே... நம்ம படத்துல தொடர்ந்து நீங்க எழுதுங்கண்ணே. 🔥👌

🌹இப்ப எடுக்கப் போற படத்துல ரெண்டு பாட்டு எழுதுங்க. அதுக்கு அஞ்சு பாட்டுக்கு உண்டான சம்பளம் என்னவோ தந்துடுறேன்’ என்றார் பஞ்சு அருணாசலம். ‘ஏன் முழுசா தரமாட்டியா?’ என்று கேட்க, ‘சரிங்கண்ணே... நீங்களே இந்தப் படத்துல எல்லாப் பாட்டும் எழுதுங்க’ என்றார். அப்படியே கொடுத்தார். வாலியும் எழுதினார். பாடல்கள் மொத்தமும் பட்டையைக் கிளப்பின.

🌹அந்தப் படம்... பஞ்சு அருணாசலம் தயாரித்த ‘வைதேகி காத்திருந்தாள்’. அப்படத்தில் ஒரு பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதினார்

🌹தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் கூட, ‘பஞ்சு அருணாசலம் எப்படி இருப்பார்’ என்பது கூட தெரியாது. அப்படியொரு மிஸ்டர் எளிமை. மிஸ்டர் அமைதி.

🌹ஒரு மனிதர், எல்லோருக்கும் பிடித்தவராக இருப்பது சாத்தியமில்லை. அதுவும் திரையுலகில் சாத்தியமே இல்லை. ஆனாலும் பஞ்சு அருணாசலம் எல்லோருக்கும் இனியர். இவர் பல திரைப்படங்களில் பல வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார் குறிப்பாக சொல்லும் படியாக "கலங்கரை விளக்கம்" திரைப்படத்தில் "பொன்னெழில் பூத்தது புது வானில்" என்ற இவர் எழுதிய பாடல் மிகவும் பிரபலமானது.இவர் பணியாற்றிய, கதையை சீர்படுத்திய படங்களை, தயாரித்த படங்களை, வரிசையாக பார்த்தாலே போதும். அது சினிமாவுக்கான வெற்றி ஃபார்முலா என உணர்ந்துவிடலாம்.

🌹பஞ்சு அருணாசலம், சத்தமே இல்லாமல் சாதனைகள் செய்த சகலகலாவல்லவன். அவர் தொட்ட துறைகளும் எட்டிய சிகரங்களும்... இன்னொரு நூற்றாண்டு சினிமாவுக்கான பெருவிருட்சம். பஞ்சு அருணாசலம் விதை நெல்! அவர் உருவாக்கிய படங்களை சினிமா இலக்கணம் என்றும் சொல்லலாம். பஞ்சு அருணாசலம் பாணி என்றும் சொல்லலாம்.

🌹பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி தூவும் நிலவே நில்

என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை

சென்றது எங்கே சொல் சொல் சொல்

என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை சென்றது எங்கே சொல்.... சொல்...

Emtertainment

Srinivas