ரஜினிக்காக சொன்ன கதையில் அவர் நடிக்க மறுக்கவே, பின்னர் தானே ஹீரோவாக டி. ராஜேந்தர் நடித்த படம்தான் உயிருள்ளவரை உஷா.
- 1980 இல் டி.ஆரின் முதல் படம் ஒரு தலை ராகம் வெளியாகி தமிழ்நாடே அதில் கட்டுண்டு கிடந்தது.
- அதில் நாயகியின் தோழியாக நடித்தவர் உஷா.
- அவரே தனது வாழ்க்கைத் துணைவி என அவரை 1982 இல் டி.ராஜேந்தர் திருமணம் செய்து கொண்டார்.
- 1983 இல் டி.ஆர். இயக்கிய படத்தின் பெயர் உயிருள்ளவரை உஷா. தனது மனைவியின் பெயரில், அவர்மீதான காதலை வெளிப்படுத்தும் டைட்டில்.
- இன்றுவரை அந்தத் தலைப்புக்கு எந்த குந்தகமும் ஏற்படாமல் இல்லறம் நடத்தி வருகிறார்.
- உயிருள்ளவரை உஷா என்ற பெயரில் ஒன்பது எழுத்துக்கள் வரும்.
- அதன் பிறகு தான் எடுத்த அனைத்துப் படங்களின் பெயரும் ஒன்பது எழுத்தில் வருவது போல் பார்த்துக் கொண்டார் டி.ஆர்.
- தங்கைக்கோர் கீதம், உறவைக்காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், சாந்தி எனது சாந்தி, எங்க வீட்டு வேலன், ஒரு வசந்த கீதம், தாய் தங்கைப் பாசம், மோனிசா என் மோனலிசா, காதல் அழிவதில்லை என எல்லாமே ஒன்பது எழுத்து டைட்டில்.
- அதுவரை தனது படங்களில் கேமியோ, கெளரவ வேடம், சிறிய காதபாத்திரத்தில் தோன்றி வந்த டி. ராஜேந்தர் ஹீரோவாக படம் முழுக்க தோன்றியது உயிருள்ள வரை உஷா படத்தில் தான்.
- வழக்கமான தனது படங்களில் இயக்கம், எழுத்து பணிகள் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள் உள்பட இதர பொறுப்புகளை ஏற்று செய்து வந்த டி. ராஜேந்தர், இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பிலும் பட்டையை கிளப்பினார்.
- அதுவரை தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கான இருந்த இலக்கணங்களை உடைத்தெறியும் விதமாக தாடியுடன் கூடிய லுக்கும், வித்தியாசமான பாடி லாங்குவேஜ் உடன் கூடிய நடிப்பையும் வெளிப்படுத்தி டி.ராஜேந்தர் ஸ்டைலை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
- உயிருள்ள வரை உஷா படம் தான் டி. ராஜேந்தர், தஞ்சை சினி ஆர்ட்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் முறையாக தயாரித்த படமாகவும் அமைந்தது.
- தனது காதலியின் பெயரையே படத்தின் டைட்டிலாக வைத்து டி. ராஜேந்தர் எடுத்திருந்த இந்த படத்தில் நடிகர் கங்கா, நளினி ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுகங்களாக தோன்றினர்.
- அதேபோல் பிரம்மாண்ட செட் அமைப்பதில் டி.ஆர்., தனித்துவமானவர் என்கிற ஃபார்முலா தொடங்கியதும் இந்த படத்தில் தான்.
- இந்த படத்தின் கதையை ரஜினியை மனதில் வைத்து டி. ராஜேந்தர் உருவாக்கியிருந்தாக கூறப்படும் நிலையில் அவர் நடிக்க முடியாமல் போயுள்ளது.
- தனது காதலியின் நினைவாக எடுக்க நினைத்த படத்தில் வேறு ஹீரோவை நடிக்க வைப்பதற்கு பதிலாக தானே ஹீரோவாக தோன்றி சிறப்பான நடிப்பின் மூலம ரசிகர்களை கவர்ந்தார்.
- படத்துக்கு டி.ராஜேந்தர் தான் பாடல் எழுதி இசையமைத்தார்.
- மேகம் வந்து தாகம், இந்திரலோகத்து சுந்தரி, கட் அடிப்போம் போன்ற பாடல்கள் அந்த கால இளசுகளை தாளம் போட வைத்தது.
- பாடகர் கே.ஜே. யேசுதாஸ் குரலில் வைகை கரை காற்றே நில்லு பாடல் காலத்தால் அழியாத மெலடியாக நிலைத்து நிற்கிறது.
- படம் முடிந்து ரிலீசாவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்த போதிலும், வெளியான பின்னர் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்தது.
- தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இந்த படம் அங்கும் ஹிட்டானது.
- இதன் பின்னர் கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
- 1980களில் வெளியாகி, தற்போது கல்ட் கிளாசிக் காதல் திரைப்படமாக மாறியிருக்கும் உயிருள்ள வரை உஷா வெளியாகி 41 ஆண்டுகள் ஆகிறது.
No comments:
Post a Comment