- நம் மக்களுக்கு பரோட்டா என்றால் கொண்டட்டம்தான். எந்த ஊருக்குப் போனாலும் தெருவுக்கு நான்கு பரோட்டா கடைகள்.
- வழக்கமான பரோட்டாவைத் தின்று அலுத்தவர்களுக்கு இலை பரோட்டா, ஸ்பெஷல்.
- சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கம், அஞ்சல் நிலையத்துக்கு எதிரில் இருக்கிறது அசோக் பரோட்டா கடை.
- இலை பரோட்டா' சாப்பிட இந்த உணவகம் நல்ல சாய்ஸ்.
- இலை பரோட்டா சாப்பிட விரும்புபவர்கள் குறைந்தது 20 நிமிடமாவது உட்கார்ந்திருக்க வேண்டும்.
- அந்த இடைவெளியில் சாப்பிட, கல்டா பரோட்டா, கோதுமை பரோட்டோ என சில வெரைட்டியான பரோட்டா வகைகள் வைத்திருக்கிறார்கள்.
- கல்டா பரோட்டாவை முறுக வேகவைத்து, பிய்த்துப்போட்டு குழம்பில் ஊறவைத்துத் தருகிறார்கள்.
வாழை இலை பரோட்டா
- இலை பரோட்டா ஒரு லேயர் வெரைட்டி.
- அகன்ற வாலையிழையை எடுத்து, முதலில் மட்டன் குழம்பை ஊற்றி விரவுகிறார்கள்.
- அது மேலே பூ மாதிரி ஒரு பரோட்டா. அதற்குமேல் எலும்பில்லாத சிக்கனை கிரேவியோடு அள்ளி வைத்துப் பரப்புகிறார்கள்.
- மேலே வெங்காயம், மிளகுத்தூள், மல்லித்தழை தூவி அதற்கு மேல் ஒரு பரோட்டா வைத்து தளும்ப சிக்கன் குழம்பு ஊற்றுகிறார்கள்.
- அப்படியே இலையை சதுரமாக மடித்துக் கட்டி பரோட்டா கல்லில் வைத்து பத்து முதல் பதினைந்து நிமிடம் வேக வைக்கிறார்கள்.
- வாழையிலையும், பரோட்டாவும் சேர்ந்து வெளிவருகிற சூப்பரான வாசனைதான் வெந்ததற்கு அடையாளம்.
- அப்படியே பாதி கருகிய இலையோடு சூடுபறக்க கொண்டு வந்து வைக்கிறார்கள்.
- இலையைப் பிரித்தால், பஞ்சு மாதிரி குழம்பில் ஊறி வெந்திருக்கிறது பரோட்டா. சிக்கன், மட்டன் குழம்புகளில் கலந்து வெரைட்டியான டேஸ்ட்.
No comments:
Post a Comment