Total Pageviews

Tuesday, August 25, 2026

நெய்க்காரப்பட்டி அச்சு வெல்லம்…

 நெய்க்காரப்பட்டி அச்சு வெல்லம்…

  • நெய்க்காரப்பட்டி. இந்த ஊரின் பெயரை சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது அங்கு தயாரிக்கப்படுகிற அச்சுவெல்லம் தான்.
  • தமிழகம் மட்டுமின்றி, கேரளாவிலும் இங்கு தயாரிக்கப்படுகிற அச்சுவெல்லத்துக்கு மவுசு அதிகம்.
  • பழநியை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் கரும்பு சாகுபடி நடக்கிறது.
  • சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
  • வயல்களிலேயே ஆங்காங்கே அச்சுவெல்ல தயாரிப்பு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
  • இதனால் வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் பழநி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் இயங்குகின்றன.
  • இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அச்சு வெல்லம் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
  • கரும்புகளை சாறு பிழிந்து, அதை நன்கு காய்ச்சுகின்றனர்.
  • பின்னர் காய்ச்சிய குழம்பு போன்ற வெல்லப் பாகுவை மரத்தினால் ஆன அச்சுக்கட்டையில் ஊற்றி சூடு ஆறியதும் காய வைத்து கீழே கொட்டுகின்றனர்.
  • இதன் பின், சுவையான அச்சு வெல்லம் விற்பனைக்கு தயாராகிறது.
  • நெய்க்காரப்பட்டியில் உற்பத்தியாகும் அச்சுவெல்லம், அங்குள்ள சந்தைகளிலேயே ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
  • இதில் தமிழக-கேரள வியாபாரிகள் கலந்து கலந்து கொண்டு போட்டி போட்டு வெல்லத்தை வாங்கி செல்வர்.
  • தமிழகம் முழுக்க அச்சுவெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் இங்கிருந்து அனுப்பப் படுகிறது.
  • நல்ல வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட வெல்லம் முதல் தரமானது. தரத்தையும் நிறத்தையும் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.

சினிமாவில் பாக்கியராஜ் ஜெயித்தது எப்படி? சுவாரசிய தகவல்

 சினிமாவில் பாக்கியராஜ் ஜெயித்தது எப்படி? சுவாரசிய தகவல்

K.Bhagyaraj

திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்ட பாக்கியராஜ் நேற்று காலை [27.06.2026] காலமானார். இது தமிழ்த்திரையுலகிற்கு மட்டும் அல்லாமல் இந்தியத் திரையுலகிற்கே பேரிழப்பாக இருந்தது. அவரைப் பற்றி சிறு கண்ணோட்டம்...

ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோயிலை சொந்த ஊராகக் கொண்டவர் பாக்கியராஜ். கலைத்துறையின் மேல் உள்ள ஈர்ப்பால் கல்லூரி காலத்தில் கோவையில் நண்பர்களுடன் நாடகம் நடத்தியவர். சினிமா கனவுகளுடன் தன்னம்பிக்கையோடு சென்னை வந்தார். பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். 1979ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் படத்தை இயக்கினார்.

அந்தப் படத்தில் வெகுளித்தனமான குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஒரு கை ஓசை படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்தார். மனைவி கணவன் மீதான சந்தேகம் கொண்ட மவுன கீதங்கள் படத்தை இயக்கி மகத்தான வெற்றி அடையச் செய்தார். 1981 முதல் 1986 வரை பாக்கியராஜ் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக்கனவுகள், சின்ன வீடு என வரிசையாக வெள்ளிவிழாப்படங்களைக் கொடுத்தார் பாக்கியராஜ்.

அத்தனை படங்களிலும் இன்னசன்ட் ஹீரோவாக நடித்து இருந்ததால் அவரது படங்களைக் காண பெண்களின் கூட்டம் திரையரங்கில் அலைமோதியது. இவரது புத்திசாலித்தனமான திரைக்கதை எழுதும் திறனைக் கண்டதால் எம்ஜிஆர் இவரைத் தனது கலையுலக வாரிசு என அறிவித்தார். அத்தனைப் படங்களும் அவரது இன்னசன்ட் காமெடிக்காகவே திரும்ப திரும்ப பார்வையாளர்களை திரையரங்கிற்கு வரவழைத்தன.

படையப்பா திரைப்படத்தின் மையக்கருத்தே நீலாம்பரி கேரக்டர் தான் - நடிகர் ரஜினி..

 படையப்பா திரைப்படத்தின் மையக்கருத்தே நீலாம்பரி கேரக்டர் தான் - நடிகர் ரஜினி..

  • தமிழ் சினிமாவில் முதன்முதலாக முன்னணி நடிகர் ஒருவருக்கு வில்லியாக நடித்து ஒரே படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இன்றளவும் நிலைத்து நிற்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
  • தன்னுடைய 14 வயதில் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு என ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
  • கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல் மூலம் ரசிகர்களிடம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற இவரை அதிகமாக மக்களிடம் கொண்டு சேர்த்த படம் என்றால் அது படையப்பா தான்.
  • படையப்பா. இத்திரைப்படத்தில் ரஜினிக்கு என்று தனியாக எதிரிகளே இருக்க மாட்டார்கள். திரைப்படத்தை நகர்த்திச் செல்லும் முக்கிய புள்ளியாக நீலாம்பரியே இருப்பார். திரைப்படத்தின் மொத்த கதையும் நீலாம்பரியை சுற்றியே பின்னப்பட்டு இருக்கும்.
  • திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வரை பழிவாங்கும் உணர்ச்சி சற்றும் குறையாத ஆக்ரோஷமான பெண்ணாக நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன்.
  • அதுவரை சாதாரண நடிகையாக இருந்த இவரை மாபெரும் நடிகையாக அடையாளம் காட்டியது அவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் தான்.
  • படையப்பா திரைப்படத்தின் மையக்கருத்தே நீலாம்பரி கேரக்டர் தான் என்று நடிகர் ரஜினிகாந்தே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
  • 1999 இல் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் இன்று வரை மக்களால் அதிகமாக ரசித்துப் பார்க்கப்படக்கூடிய ஒரு எவர்கிரீன் திரைப்படமாக இருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணம் நிச்சயமாக இந்த நீலாம்பரி கேரக்டரை சொல்லலாம்.
  • அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர்.
  • இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது.

நதி நீர் இணைப்பு !

பிரம்மபுத்திராவை காவேரி மற்றும் கோதாவரியுடன் இணைப்பதன் மூலம், அடுத்த 100 ஆண்டுகளுக்கான இந்தியாவின் தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க முடியும் என்று அமித் ஷா கூறுகிறார்.

சிலர்:

இந்தியா முழுவதும் நதி நீர் இணைப்புனு சொல்லி வடை சுட்டு ரொம்ப நாளாவுது.... மக்கள் மறந்து இருப்பாங்க.... வடையை திருப்பி சுடுங்க ஜி...... எவன் நம்மல கேப்பான்

நான்:

சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படாமல் திட்டம் நிறைவேற்றுவது இயலாத காரியமாகும்

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம்.!


ரஜினிகாந்த், இன்று வரை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இந்த இடத்திற்கு அவர் வர பல காரணங்கள். அவரது ஸ்டைல், கதைத்தேர்வு, அர்ப்பணிப்பு, கடின உழைப்பு... எனச் சொல்லிக்கொண்டே போகலாம். சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி, அந்த இடத்தை நோக்கி நடத்திய பயணத்தில் முக்கிய மைல் கற்களாக பல படங்கள் இருந்தன. அவற்றில் மிக முக்கியமான இரண்டு படங்கள் அண்ணாமலை, பாட்ஷா.

அதுவரை சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்டு, முதல் இடத்தில் இருந்த ரஜினியை அதற்கு அடுத்த கட்டத்திற்கு, அதற்கு அடுத்த மிகப்பெரிய உயரத்திற்கு எடுத்துச் சென்ற படம் 'அண்ணாமலை'. தமிழ் சினிமாவின் மாஸ் கமர்சியல், பொழுதுபோக்குத் திரைப்படங்களுக்கான இலக்கணத்தில் ஒரு அப்டேட்டாக அமைந்தது 'அண்ணாமலை'.

ரஜினியின் பல படங்களில், டைட்டிலில் சூப்பர்ஸ்டார் என்று ஒரு மாஸான இசையுடன் வரும். அது உருவாக்கப்பட்டது அண்ணாமலை படத்தில்தான். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த அந்தப் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

முதலில் இந்தப் படத்தை இயக்குனர் வசந்த் இயக்குவதாக இருந்தது. எதிர்பாராத விதமாக இயக்குனர் வசந்த் இந்த படத்தில் இருந்து விலகினார். இதனால் தயாரிப்பாளர் பாலச்சந்தர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் இப்படத்தை இயக்கும் பொறுப்பை கொடுத்தார். அதற்கு ஒத்துக் கொண்ட சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை மூன்றே மாதங்களில் முடித்தார். அதே ஆண்டு ஜூன் மாத இறுதியில் வெளிவந்த அண்ணாமலை படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.

ஒரு ஹீரோயிஸப் படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எத்தனையோ படங்கள் உதாரணமாய் இருக்கின்றன. அப்படி ஹீரோயிஸத்துடன் வந்த படங்கள்தான், மாஸ் படங்கள் என்று கொண்டாடப்பட்டு வருகின்றன. கலெக்‌ஷனிலும் மக்களின் மனங்களுடனான கனெக்‌ஷனிலும் இன்றைக்கும் கொடிகட்டிப்பறக்கும் படங்களாக சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. தமிழ் சினிமாவின் அப்படியான அதிரிபுதிரி மாஸ் ஹீரொ படமாக இன்றைக்கும் ‘அண்ணாமலை’ படத்தை அண்ணாந்து பார்த்து சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

பால்கார அண்ணாமலைக்கும் பணக்கார அசோக்கிற்குமான நட்பில் ஆரம்பித்து பின்னர் துரோகத்தில் வெடித்து, தொழிலிலும் ஸ்டேட்டஸிலும் உயர்வுக்கு வந்து, ஜெயித்துக் காட்டுகிற டெம்ப்ளேட் ஹீரோயிஸக் கதைதான் ‘அண்ணாமலை’. ஆனால் இப்படி டெம்ப்ளேட் சதுரவட்டங்களுக்குள் நிறுத்திவிடாமல் மலையளவு உயர்ந்து நின்றதுதான் ரஜினியின் மேஜிக்.

படத்தின் முதல் பலமாக சண்முகசுந்தரத்தின் கதையும் வசனமும் இடம் பிடித்தது. ஒருபக்கம் ரஜினியின் குடும்ப சென்டிமென்ட், சரத்பாபுவுடன் நட்புப் பாசம், குஷ்புவைப் பார்ப்பதிலும் பாம்பு பார்ப்பதிலுமாக உள்ள காமெடி கலாட்டா, ராதாரவியின் சைலண்டான வில்லத்தனம், ரஜினியின் சபதம் என ஒரு மாஸ் படத்துக்குள் என்னென்ன அடங்கவேண்டுமோ அவை அழகாக அடுக்கப்பட்டிருந்தன. அதை காட்சியாக விரிவுபடுத்திக் கொண்டே வந்ததுதான் சுரேஷ்கிருஷ்ணாவின் சாமர்த்தியம்; திறமை.

பால்காரர், தோளில் துண்டு, சைக்கிள் எனும் விஷயங்கள் சி செண்டர் ஆடியன்ஸை படத்துடன் கனெக்ட் செய்வதற்கு பெரிதும் உதவின. ஆனால் பால்காரராக, தோளில் துண்டுடன் சைக்கிளில் சுற்றுவது ரஜினியாக இருந்ததால்தான் இவையெல்லாம் எடுபட்டது.

‘கூட்டிக்கழிச்சுப் பாரு, கணக்கு சரியா இருக்கும்’ என்கிற ராதாரவியின் அசால்ட் வசனம், மிகப்பிரபலம். வில்லனுக்கு மேனரிஸம், வில்லனுக்கு பஞ்ச் டயலாக் என வந்ததும் ‘அண்ணாமலை’யைப் போலவே பின்னர் விஸ்வரூபமெடுத்தது.

ஒரு மாஸ் படத்தில் என்ன இருக்கவேண்டுமோ அவையெல்லாம் ‘அண்ணாமலை’யில் உண்டு. ஒரு ஹீரோயிஸ படத்துக்கு என்ன தேவையோ அவையெல்லாம் இதில் இருந்தன. உயரத்தில் இருக்கும் ரஜினியை, மலையளவுக்கு ‘அண்ணாமலை’ உயர்த்தியது என்பதும் உண்மை.

ரஜினி - தேவா - வைரமுத்து கூட்டணி ஒன்று உருவானதும் இங்கேதான். சுரேஷ்கிருஷ்ணாவை கமர்ஷியல் இயக்குநர் விசிட்டிங்கார்டு கொடுத்து, அடுத்த உயரத்துக்கு அவரை அழைத்துச் சென்றதும் ‘அண்ணாமலை’தான்!

1992ம் ஆண்டு, ஜூன் மாதம் 27ம் தேதி வெளியானது ‘அண்ணாமலை’. திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் நூறுநாள், இருநூறு நாளைக் கடந்து ஹவுஸ்புல் கலெக்‌ஷனைக் கொடுத்தது.

இன்னும் பல வருடங்கள் கழித்து, ‘அண்ணாமலை’ படத்தை எந்த ஹீரோவாவது ரீமேக் செய்ய ஆசைப்படலாம். 30 வருடங்கள் கழித்தும் இப்போதும் மனதில் மலையென அமர்ந்திருக்கிற ‘அண்ணாமலை’யின் வெற்றி, அப்படி ரீமேக் செய்யத் தூண்டலாம். ஆனால், ‘மல... அண்ணாமலை’ என்று அது ஹிட்டடிக்குமா என்பது கேள்விக்குறிதான். இந்தக் கேள்விக்குறிதான் ரஜினி எனும் மேஜிக் எனும் ஆச்சரியக்குறி!!
Credits to Writter ✍️ #Rajinism #Annamalai #51YearsOfRajinism

கே.பி.சுந்தராம்பாளைப் புகழ்ந்த ஜெமினிகணேசன் !

 கல்யாண வீட்டில் கலாட்டா... கே.பி.சுந்தராம்பாளைப் புகழ்ந்த ஜெமினிகணேசன்

கொடுமுடி கோகுலம் என்று அழைக்கப்பட்டவர் பழம்பெரும் நடிகை கே.பி.சுந்தராம்பாள். அவர் மீது நடிகர் ஜெமினிகணேசனுக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது. அவரோடு எனக்கு நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. என்னை ஒரு பிள்ளை மாதிரிதான் என்னை அவங்க நடத்துனாங்க. ஒரு திருமண விழாவில் நாங்க இருவரும் கலந்து கொண்டோம்.

கே.பி.சுந்தராம்பாளும் அந்த திருமண விழாவில் அடி எடுத்து வைத்த உடன் அங்கு பாடல்கள் எல்லாம் ஒலிபரப்பிக் கொண்டு இருந்தன. ஒருவர் கேபி.சுந்தராம்பாளின் பாட்டை எடுத்துப் போட்டார். அந்தப் பாட்டைப் போட்டதுதான் தாமதம். மிகுந்த கோபத்துடன் அந்த மைக் செட் காரரிடம் போன கே.பி.சுந்தராம்பாள் முதல்ல அந்தப் பாட்டை நிறுத்துறீயான்னு கேட்டார். அந்த மைக் செட் காரருக்கு ஒண்ணும் புரியல.

அம்மா இது நீங்க பாடுன பாட்டுதான் என்றார். அதற்கு நான் பாடுன பாட்டு தான். அதுக்குக் கல்யாண வீட்டுல என்ன பாட்டைப் போடுறது? இந்தப் பாட்டு ஜவகர்லால் நேரு மறைந்தபோது பண்டிதர் நேருவை நாம் பறிகொடுத்து விட்டோமேன்னு நான் பாடுன பாட்டு. அந்தப் பாட்டைக் கல்யாண வீட்ல யாராவது போடுவாங்களா?

முதல்ல அந்தப் பாட்டை நிறுத்து. மங்களகரமான ஒரு பாட்டைப் போடப்பா என்றார். தான் பாடுன பாட்டைத்தான் அந்த மைக் செட் காரர் போட்டுருக்கார் என்று எளிதில் அதைக் கடந்து போகவில்லை. அதுதான் கேபி.சுந்தராம்பாள் என்று ஒரு பத்திரிகை பேட்டியில் ஜெமினிகணேசன் பதிவு செய்துள்ளார்.

வாழை இலை பரோட்டா !

 வாழை இலை பரோட்டா - சேலம்…

  • நம் மக்களுக்கு பரோட்டா என்றால் கொண்டட்டம்தான். எந்த ஊருக்குப் போனாலும் தெருவுக்கு நான்கு பரோட்டா கடைகள்.
  • வழக்கமான பரோட்டாவைத் தின்று அலுத்தவர்களுக்கு இலை பரோட்டா, ஸ்பெஷல்.
  • சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கம், அஞ்சல் நிலையத்துக்கு எதிரில் இருக்கிறது அசோக் பரோட்டா கடை.
  • இலை பரோட்டா' சாப்பிட இந்த உணவகம் நல்ல சாய்ஸ்.
  • இலை பரோட்டா சாப்பிட விரும்புபவர்கள் குறைந்தது 20 நிமிடமாவது உட்கார்ந்திருக்க வேண்டும்.
  • அந்த இடைவெளியில் சாப்பிட, கல்டா பரோட்டா, கோதுமை பரோட்டோ என சில வெரைட்டியான பரோட்டா வகைகள் வைத்திருக்கிறார்கள்.
  • கல்டா பரோட்டாவை முறுக வேகவைத்து, பிய்த்துப்போட்டு குழம்பில் ஊறவைத்துத் தருகிறார்கள்.

வாழை இலை பரோட்டா

  • இலை பரோட்டா ஒரு லேயர் வெரைட்டி.
  • அகன்ற வாலையிழையை எடுத்து, முதலில் மட்டன் குழம்பை ஊற்றி விரவுகிறார்கள்.
  • அது மேலே பூ மாதிரி ஒரு பரோட்டா. அதற்குமேல் எலும்பில்லாத சிக்கனை கிரேவியோடு அள்ளி வைத்துப் பரப்புகிறார்கள்.
  • மேலே வெங்காயம், மிளகுத்தூள், மல்லித்தழை தூவி அதற்கு மேல் ஒரு பரோட்டா வைத்து தளும்ப சிக்கன் குழம்பு ஊற்றுகிறார்கள்.
  • அப்படியே இலையை சதுரமாக மடித்துக் கட்டி பரோட்டா கல்லில் வைத்து பத்து முதல் பதினைந்து நிமிடம் வேக வைக்கிறார்கள்.
  • வாழையிலையும், பரோட்டாவும் சேர்ந்து வெளிவருகிற சூப்பரான வாசனைதான் வெந்ததற்கு அடையாளம்.
  • அப்படியே பாதி கருகிய இலையோடு சூடுபறக்க கொண்டு வந்து வைக்கிறார்கள்.
  • இலையைப் பிரித்தால், பஞ்சு மாதிரி குழம்பில் ஊறி வெந்திருக்கிறது பரோட்டா. சிக்கன், மட்டன் குழம்புகளில் கலந்து வெரைட்டியான டேஸ்ட்.