படையப்பா திரைப்படத்தின் மையக்கருத்தே நீலாம்பரி கேரக்டர் தான் - நடிகர் ரஜினி..
- தமிழ் சினிமாவில் முதன்முதலாக முன்னணி நடிகர் ஒருவருக்கு வில்லியாக நடித்து ஒரே படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இன்றளவும் நிலைத்து நிற்பவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
- தன்னுடைய 14 வயதில் வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு என ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
- கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல் மூலம் ரசிகர்களிடம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற இவரை அதிகமாக மக்களிடம் கொண்டு சேர்த்த படம் என்றால் அது படையப்பா தான்.
- படையப்பா. இத்திரைப்படத்தில் ரஜினிக்கு என்று தனியாக எதிரிகளே இருக்க மாட்டார்கள். திரைப்படத்தை நகர்த்திச் செல்லும் முக்கிய புள்ளியாக நீலாம்பரியே இருப்பார். திரைப்படத்தின் மொத்த கதையும் நீலாம்பரியை சுற்றியே பின்னப்பட்டு இருக்கும்.
- திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் வரை பழிவாங்கும் உணர்ச்சி சற்றும் குறையாத ஆக்ரோஷமான பெண்ணாக நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன்.
- அதுவரை சாதாரண நடிகையாக இருந்த இவரை மாபெரும் நடிகையாக அடையாளம் காட்டியது அவர் ஏற்று நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் தான்.
- படையப்பா திரைப்படத்தின் மையக்கருத்தே நீலாம்பரி கேரக்டர் தான் என்று நடிகர் ரஜினிகாந்தே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
- 1999 இல் எடுக்கப்பட்ட இத் திரைப்படம் இன்று வரை மக்களால் அதிகமாக ரசித்துப் பார்க்கப்படக்கூடிய ஒரு எவர்கிரீன் திரைப்படமாக இருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணம் நிச்சயமாக இந்த நீலாம்பரி கேரக்டரை சொல்லலாம்.
- அதன் பிறகு பாகுபலி படத்தில் சிவகாமி தேவி மேலும் இவருக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுத்தது. இவரை அனைவரும் ராஜமாதாவாகவே கருதினர்.
- இவரை தவிர யாராலும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவரது நடிப்பு அருமையாக இருந்தது.
No comments:
Post a Comment