Total Pageviews

Tuesday, October 27, 2026

சித்தர்கள் சொன்ன வாழ்வின் ரகசியங்கள்... அட அட... இவ்ளோ நாளா இது தெரியாமப் போச்சே!

 

நம் வாழ்வில் எத்தனையோ ரகசியங்கள் உள்ளன. அவற்றை விளக்கிச் சொல்வோர் யாருமில்லை. ஆனால் சித்தர்கள் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். அதைத்தான் நம் முன்னோர்கள் பின்பற்றுகிறார்கள். பார்க்கலாமா...

படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும். பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும். விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம். காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில் ஒற்றிக் கொள்ளவேண்டும். கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம்.

கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை. இதை தான் எரிச்சல் என்பார்கள். கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள். நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது.

உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களில் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும். இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம்.

இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும். உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும். அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது.

மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி. துரியோதனன் போருக்கு போகும் முன் தன தாயிடம் ஆசி பெற செல்கிறான். எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள்.அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள்.

பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது. குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .

கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள். அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார். இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது பார்த்து உண்ணவேண்டும் .கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான்.

அடுத்து மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும். நான் காலையில் சிறிது தூரம் நடை பயிற்சி செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்கிறேன். அவர்கள் சொல்கிறார்கள் மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன். என்னை பொறுத்தவரையில் அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை பழக்கம் இல்லாத காரணமும் தான்

காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது. பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது. சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல். குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும்.

ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள். இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை . சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும் மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள்.

அதன் படி உணவு முறைகளான இவைகள் நக்கி சாப்பிடுவது, சப்பி சாப்பிடுவது, கடித்து சாப்பிடுவது, உறிந்து சாப்பிடுவது என்று 4 வகையாக பிரிக்கலாம். எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று முறை இருக்கிறது .

சித்தர்கள் சொல்வது உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில் அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .

கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும் சக்கரை நோய் வராது, உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும். கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .

பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை என்று சொல்கிறது. இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது, எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும் என்று சொல்கிறார்.

மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில் தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உண்ணச் சொல்லி உள்ளார்கள். நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து நோய்களை அறியலாம். நகம், விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம்.

மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம் அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம். இதுவே தீக்ஷை, இதை மகான்கள், சித்தர்கள், தூதுவர்கள் செய்தார்கள்.

கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன்

நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம். இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது. இந்த சூடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை.

குளிர்ச்சி தேவை: இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள் ஆம். லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது. தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.

சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது. உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம் சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

மேக்கரை கிராமம் மற்றும் அடவிநயினார் அணை !

 

  • மேக்கரை கிராமம் மற்றும் அடவிநயினார் அணை தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மிக அழகான, அமைதியான இயற்கையின் புகலிடம்.
  • குற்றாலத்தின் பிரதான அருவிகளில் இருக்கும் இரைச்சலும் கூட்டமும் பிடிக்காதவர்கள், ஒரு அமைதியான மற்றும் பசுமையான சூழலை அனுபவிக்க இந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • மேக்கரை கிராமத்திற்குள் நீங்கள் நுழையும் போதே உங்களை குளிர்ந்த காற்றும், இருபுறமும் பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான நெல் வயல்களும், தென்னை மற்றும் வாழைத் தோட்டங்களும் வரவேற்கும்.
  • இந்த அணை அனுமந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. சுமார் 132 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை, பருவமழைக் காலங்களில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) முழுமையாக நிரம்பி வழியும் போது, மலைகளுக்கு நடுவே நீர் வீழ்வது போன்ற மிக அற்புதமான காட்சியைத் தரும்.
  • வணிகமயமாக்கப்படாத இந்த இடத்தில் கடைகளோ அல்லது மற்ற சுற்றுலாத் தலங்களைப் போன்ற இரைச்சலோ கிடையாது.
  • நீங்கள் இயற்கையோடு தங்கி ஓய்வெடுக்க விரும்பினால், அணைக்குச் செல்லும் சாலையில் உள்ள ரிசார்ட்ஸ் போன்ற இயற்கை தங்குமிடங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • அடவிநயினார் அணை செங்கோட்டை வட்டத்தில் உள்ள மேக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது.
  • தென்காசியில் இருந்து சுமார் 15 கி.மீ. இலத்தூர், பண்பொலி (புகழ்பெற்ற திருமலைக்குமார் சுவாமி கோவில் வழி) வழியாக மேக்கரையை அடையலாம்.

எஸ்வி.சுப்பையாவுக்கு இருந்த கலைத்தாகம்... கமல் சொன்ன அந்த ஆச்சரிய தகவல்!

 

kamal, sv.subbaiah

எஸ்வி.சுப்பையா எப்படிப்பட்ட நடிப்பாற்றல் கொண்ட அற்புதமான நடிகர் என்பது நாம் அறிந்த விஷயம். அப்படிப்பட்ட ஆற்றல் மிக்க நடிகரான எஸ்.வி.சுப்பையாவோடு அரங்கேற்றம் படத்தில் இணைந்து நடித்தார் கமல்ஹாசன். அவர் சுப்பையாவின் கலைத்தாகம் எப்படிப்பட்டது என்பது பற்றி பத்திரிகை ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

உலகத்திரைப்பட விழாக்கள் எங்கு நடந்தாலும் அங்கு சுப்பையாவைப் பார்க்கலாம். பெளினி படம் கூட அவர் பார்ப்பார். ஆனா அவரு பேரைக்கூட உச்சரிக்க அவருக்கு வராது. ஆனா அதுக்காக அப்படிப்பட்ட படங்களை எல்லாம் பார்க்க வராம இருக்க மாட்டாரு. அவருக்குப் புரியாத விஷயங்களை எல்லாம் பக்கத்தில இருக்குறவங்ககிட்ட கேட்டுத் தெரிந்து கொள்வார். அப்படிப்பட்ட ஒரு கலைத்தாகம் மிக்க மனிதராக வாழ்ந்தவர்தான் எஸ்.வி.சுப்பையா.

ஜெயகாந்தனோட பிரம்மா உபதேசம் என்ற நாவலை அவர் திரைப்படமாக எடுத்தார். ஆனால் அந்தப் படத்தை வெளியிட அவரால முடியல. அவர் வீட்டுப் பரண் மேல அந்தப் படத்துப் படப்பெட்டியைப் போட்டு வைத்து இருந்தார். இங்கே எஸ்.வி.சுப்பையா மாதிரி பல பேருக்கு கலைத்தாகம் இருக்கு. ஆனா அதுக்கேற்ற வசதி, வாய்ப்புகள்தான் இல்லை என்று அந்தப் பத்திரிகை பேட்டியில் தெரிவித்துள்ளார் கமல்.

இயக்குனர் செய்த அந்த வேலை... தாங்க முடியாத ஏக்கத்தில் மெல்லிசை மன்னர்கள்!

 

MSV, Ramamoorthi

தமிழ்சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்த இசை அமைப்பாளர் தான் மெல்லிசை மன்னர்களான எம்எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும்.

இவர்கள் இசை அமைப்பில் உருவான 100க்கணக்கான பாடல்கள் இன்றைக்கும் பல லட்சம் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாக உள்ளன. அப்படி எண்ணற்ற வெற்றிப் பாடல்களைத் தந்த இந்த இசை அமைப்பாளர்களுக்குப் பிடித்த பாடல் என்ன தெரியுமா?

காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் நாளாம் நாளாம் திருநாளாம். மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன், கலை இயக்குனர் கங்காவோடு இணைந்து பாக்யலட்சுமி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கி, அதன் சார்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் கலைக்கோயில் என்ற படத்தைத் தயாரித்தது பலருக்கும் தெரியும். முதலில் அந்தப் படத்தில் ஒரு இந்திப்பாடல் இடம்பெறுவதாக இருந்தது. அந்தப் பாடலை லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே ஆகிய இருவரது குரலில் பதிவு செய்ய வேண்டும் என்பது இவர்களது ஆசை.

ஆனால் கடைசி நேரத்துல அந்தக் காட்சியையே படத்தில் இருந்து தூக்கி விட்டார் இயக்குனர். எங்களுக்கு அந்த ஆசையை நிறைவேற்ற முடியலையே என்கிற ஏக்கம் பல ஆண்டுகள் இருந்தது என ஒரு பத்திரிகையில் பதிவு செய்துள்ளார் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி.

சூப்பர்ஸ்டாரின் 'ஜெயிலர் 2 திரைப்படம்…

 

  • நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' திரைப்படம் அக்டோபர் 15 வெளியானது.
  • 'ஜெயிலர் 2' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
  • இப்படத்தில், ரஜினிகாந்த் தனது புகழ்பெற்ற 'டைகர்' முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்துள்ளார்.
  • முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா, ரித்விக் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சூரஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், அன்னா ராஜன், ஜதின் சர்னா ஆகியோர் இணைந்துள்ளனர்.
  • மேலும், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரின் சிறப்புத் தோற்றங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

திரைக்கதை

  • தனது குடும்பத்தை கொலை செய்ய நினைத்த விநாயகனை, ரஜினிகாந்த் கொலை செய்வதுடன் ஜெயிலர் முதல் பாகம் முடிவடைந்தது. அதில் இருந்து இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது. சிலை கடத்தல் மன்னன் விநாயகனை கொலை செய்த பிறகு குடும்பத்துடன் கோவையில் செட்டிலாகி இருக்கிறார் ரஜினிகாந்த்.
  • விநாயகனை கொலை செய்த ரஜினிகாந்தை எப்படியாவது பழி தீர்க்க துடிக்கிறார் சூரஜ் வெஞ்சாரமூடு
  • இதற்கிடையில் சூரஜ் வெஞ்சாரமூடுவின் கூடாரத்தில் சேரும் ரஜினிகாந்த், அந்தக் கூட்டத்துக்கு உத்தரவுகளை பிறப்பித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவை நெருங்க நினைக்கிறார்.
  • இதன் காரணமாக ரஜினிகாந்தின் குடும்பத்துக்கு மீண்டும் சோதனைகள் ஏற்படுகிறது.
  • இக்கட்டான சூழலில் தனது குடும்பத்தை ரஜினிகாந்த் காப்பாற்றினாரா? எஸ்.ஜே.சூர்யா, ரஜினிகாந்தை பழிதீர்க்க துடிப்பது ஏன்? விநாயகனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பல கோடி மதிப்பிலான சிலைகள் எங்கே போனது? என்பதே இப்படத்தின் பரபரப்பான மீதி கதை".

Tuesday, October 20, 2026

தன்னம்பிக்கை என்றால் என்ன தெரியுமா?

 


நண்பர் ஒருவர் அனுப்பிய வாட்ஸ்ஆப் பதிவு இது. எழுதியவர் பெயர் இல்லை. எழுதிய பதிவர் இங்கு துபாயில்தான் இருக்கிறார்.இந்த பதிவு வாழ்க்கை பாடத்தை நமக்கு அளிக்கிறது.

தன்னம்பிக்கை என்றால் என்ன தெரியுமா?

காலை 7 மணிக்கு வழக்கம்போல் அலுவலகம் சென்ற நான், அதே நாளில் காலை 10.30 மணிக்கு “வேலை இல்லை” என்ற செய்தியுடன் வெளியே வந்தேன்.

அதுவும் எங்கே? Dubai. MD அவர்களே என்னை நான் தங்கி இருந்த இடத்தில் இறக்கி வைத்து,

“ஒரு மாதம் company accommodation-ல் தங்கி வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள்…” என்று சொல்லிவிட்டு சென்றார்.

பலருக்கு அது வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும்.

ஆனால் நான்? ஒரு நிமிஷம் கூட பதற்றப்படவில்லை. அமைதியாக உட்கார்ந்து யோசித்தேன்.

பல வருடங்களுக்கு முன் வேலை பார்த்திருந்த ஒரு பழைய நிறுவனத்தை தொடர்பு கொண்டு GM appointment கேட்டேன்.

அவர்கள் நேரம் கொடுத்தார்கள். போனேன்.

அந்த வேலை கிடைக்கவில்லை. ஆனால் வாழ்க்கை கதவுகளை மூடுவதற்கு முன், இன்னொரு கதவை திறந்து வைத்திருக்கும். அங்கே இருந்த ஒரு நண்பர் மூலம் இன்னொரு contact கிடைத்தது.

உடனே தொடர்பு கொண்டேன். “வாங்க பேசலாம்” என்றார். சென்று சந்தித்தேன்.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் பேசினோம். வெளியே வந்தபோது… கையில் Appointment Order. மறுநாள் பழைய முதலாளியை சந்தித்து, “வேறு வேலை கிடைத்துவிட்டது” என்று சொன்னபோது, ஒரே நாளில் வேலை மாறியதை கேட்டு அவருக்கே அதிர்ச்சி!

இதோ இன்னொரு சம்பவம்…

என் மகளின் நிச்சயதார்த்த தேதி முடிவாகி விட்டது. ஊருக்கு வர டிக்கெட் கூட போட்டுவிட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் கிளம்ப வேண்டும். அந்த நேரத்தில் மீண்டும் வேலை போனது. ஆனால் அப்போதும் நான் கலங்கவில்லை.

ஒரு வாரத்திற்குள் பலரை தொடர்பு கொண்டு புதிய வேலை ஏற்பாடு செய்துவிட்டு, எந்த சலனமும் இல்லாமல் ஊருக்கு வந்து நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்தேன். மீண்டும் துபாய் திரும்பி புதிய வேலையில் சேர்ந்தேன். அதற்குப் பிறகு மூன்றே மாதத்தில் மகள் திருமணத்திற்கு ஒரு மாத விடுமுறை கூட எடுத்தேன்.

இப்போது நினைத்தால்… “அது எல்லாம் எப்படி சாத்தியமானது?” என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கும். பதில் ஒன்று தான்:

“நான் என் மேல் வைத்திருந்த நம்பிக்கை.”

வாழ்க்கையில் பிரச்சனைகள் வராமல் இருக்காது. ஆனால் தன்னம்பிக்கை இருந்தால், பிரச்சனை நம்மை பயமுறுத்தாது. ஒரு முக்கியமான விஷயம்…

நான் சொன்ன இந்த இரண்டு சம்பவங்களும், சொல்லாமல் விட்ட இன்னும் பல சம்பவங்களும் — இன்று வரை என் குடும்பத்தினருக்கே தெரியாது.

ஏனென்றால்…

"சில போராட்டங்கள் சத்தமில்லாமல் வெல்லப்படுகின்றன.

அதற்குப் பெயர் தான் தன்னம்பிக்கை".

Monday, October 19, 2026

வெப்பமும்....வேண்டுகோளும் ! மரம் நடுவோம் ..

வெப்பமும்....வேண்டுகோளும்


இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போ உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்போ நம்மால் தாங்க இயலாது

குழந்தைகளைக் காப்பாற்று வதற்கு சிரமம்

இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பளம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது,

நம்ம வீட்டை சுற்றி இடமிருப்பி ன் முடிந்தளவிற்கு மரங்களை நடுங்கள்,

மரம் நடுவோம் ...

இயற்கையை காப்போம்

வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்போது தமிழகத்தில் 10 கோடி மர கன்றுகள் நட இப்போதே திட்டமிடுவோம்

மர கன்றுகள் உற்பத்தியாளர் கள்,வனத்துறை,பள்ளி தாளாளர்கள்,உயர்பதவிகளில் இருப்போர்,பிரபலங்கள்,ஆன்மீக தலைவர்கள்,அனைத்து மதங் களின் குருமார்கள், கிராம தலைவர்கள், ஊர் தலைவர்கள்,

அனைத்து கட்சி தலைவர்கள் ஒன்று கூடி செயல்படுவோம்.

அதற்கு இப்போதிருந்தே தயார் ஆகி கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு குழுவை இப்போதே உருவாக்கி கொள்ளுங்கள்

1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு சாதிக்க முடியும். ஒவ்வொரு மர கன்றிற் கும் அடுத்த 1 வருடம் தினமும் 1 லிட்டர் நீர் விட்டால் போதும்.

இதே போல் சில வருடங்கள் செய்தால், 2030 க்குள் தமிழகமும் குளிர்ந்து போகும்

அவரவர் ஊர்களில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் ஆகுங்கள். கிராமங்களில் இன்னும் அதிக மர கன்றுகள் நடுவதற்கு திட்டமிடுங்கள்.

இதற்கான வாட்ஸ்அப் குழுக்க ள் அந்தந்த ஊர்களில், கிராமங் களில் இன்றே துவங்குங்கள்.

மர கன்றுகள் நடுங்கள்

அல்லது மர கன்றுகள் வாங்கி கொடுங்கள் அல்லது மர கன்று கள் நட உதவுங்கள்.

மர கன்றுகள் தேவைக்கு உங்களுக்கு அருகில் உள்ள நாற்றுப் பண்ணைகளில், நர்சரிகளில் இப்போதே முன் பதிவு செய்யுங்கள்

பொது இடங்களில் -

1,புங்கன் மரம்

2,வெப்ப மரம்

3,ஆவி மரம்

4,அரச மரம்

5,குருவி பழம் என்ற சர்க்கரை பழம்,

லட்டு பழம்

இவைகளை வளர்ந்த கன்றுகளாக பார்த்து வாங்கி நடுவது நன்று. இதில் புங்கன் மரத்தை ஆடு மாடுகள் கடிக்காது

நீர் வழி தடங்கள் அருகில்

1,பூவரசு மரம்

2,பனை மரம்

பாதுகாப்பு உள்ள வீட்டு அருகில் உள்ள இடங்களில் அவரவர் விருப்ப மர கன்றுகள் நடலாம்.

1,கறிவேப்பிலை

2,லட்ச கொட்டை கீரை

3,தேக்கு

4,நாட்டு மா மரம்

5,நாட்டு பலா

6,நாட்டு அத்தி

7,குமிழ்

8,மகா கனி

9,மலை வேம்பு

போன்ற மரங்கள் நடலாம்

வழிபாட்டு தலங்கள் -

1,மர மல்லி

2,மகிழம் மரம்

3,மனோரஞ்சிதம்

4,பாரிஜாதம்

5,புன்னை மரம்

6,செண்பக மரம்

7,மருதாணி போன்றவற்றை நடலாம்

2030 இல் பச்சை பசேல் என்ற தமிழகம் உருவாக்குவோம்

இனி வரும் காலங்களில் உண்டாக இருக்கும் கோடை கால கடும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.

மக்களிடம் எடுத்து சொல்லுங்க ள். விழிப்புணர்வு செய்யுங்கள்.

மரகன்றுகள் நடுவதற்கு ஆவ ணி மாதத்தில் முதல்மழை பெய்ததும் 1நாள் பொதுவிடுமு றை அறிவிக்கவேண்டுகிறோம்

வெப்ப அலைகளுக்கெதிரான ஒரு போர் போல் தான் இதுவும்

ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்

நன்றே செய்வோம்.அதனை இன்றே துவங்குவோம்

பிடித்திருந்தால் காப்பி செய்து பதிவிட்டு இயற்கையை காக்க உதவுங்கள்...

------------------