பொது அறிவு தகவல்கள் / செய்திகள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்
Total Pageviews
Wednesday, October 14, 2026
தன்னம்பிக்கை கொள்வதின் முதல்படி எது ? தன்னை அறிவது!
16 வயதினிலே !
'16 வயதினிலே' படத்திற்காக ஸ்ரீதேவியைச் சந்திக்க அவரது வீட்டுக்கே சென்று கதையைச் சொன்னேன். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் விரிவாக எடுத்துரைத்தேன். அப்போது ஸ்ரீதேவியின் கண்கள் என்னை ஏதோ ஒரு விதத்தில் ஈர்த்தன. கதையின் கடைசிக் காட்சியைச் சொல்லி முடிக்கும் வரை, அவரது கண்களிலிருந்து என் பார்வையை விலக்க முடியாமல் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன்.
பாக்யராஜ் !
🌹பாக்யராஜ் விட்டு சென்ற காலத்தால் அழியாத டாப் 10 காமெடி கிளாசிக்ஸ்!!
🌹தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாக்யராஜின் ம*றைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நக்கல், நையாண்டி மிகுந்த வசனங்கள், ஆழமான கருத்துகளை கூட நகைச்சுவை மூலம் கடத்தும் திறன், அசாத்தியமான நடிப்பு, அடுத்த வீட்டுக்காரர் போன்ற எளிமையான தோற்றம் ஆகியவை மக்களிடையே அவரை கொண்டு சென்று சேர்த்தது.
🌹தனது இயக்கத்தில் மட்டுமின்றி, வேறு சில இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வெற்றி வாகை சூடியுள்ளார். எத்தகைய இறுக்கமான சூழலிலும் பாக்யராஜின் படத்தை பார்த்தால் மனதில் உள்ள பாரத்தை மறந்து பார்வையாளர்களால் சிரிக்க முடியும் என்பதே அவரின் மிகப்பெரிய பலமாகும்.
🌹இது நம்ம ஆளு - பாக்யராஜின் பல மறக்க முடியாத மற்றும் தவிர்க்க முடியாத படங்களின் வரிசையில் இது நம்ம ஆளு திரைப்படத்திற்கு முக்கிய பங்கு உண்டு. வேலையில்லா பட்டதாரி இளைஞர், வயிற்று பிழைப்பிற்காக அக்ரகாரத்தில் குடியேறி, அங்குள்ள உயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வதை போன்று இப்படம் அமைதிருக்கும். க்ளைமேக்ஸில் சமூகநீதி குறித்து பேசியிருந்தாலும், விழுந்து விழுந்து சிரிப்பதற்கான பல தருணங்கள் இந்த படத்தில் உள்ளன
🌹அவசர போலீஸ் 100: தனது ஆதர்ஷன நாயகனான எம்.ஜி.ஆருக்காக எழுதிய திரைப்படத்தில், தானே இரட்டை கதபாத்திரத்தில் நடித்த திரைப்படம் அவசர போலீஸ் 100. முழுக்க முழுக்க நகைச்ச்சுவையாக வெளியான இப்படத்தில் சில்க் ஸ்மிதா கவனம் ஈர்க்க, எம்.ஜி.ஆரின் கேமியோவை பயன்படுத்திய விதமும் ரசிகர்களை கவர்ந்தது.
🌹ருத்ரா: இந்த திரைப்படத்தில் கைதேர்ந்த திருடனாக பாக்யராஜ் நடித்து இருப்பார். குறிப்பாக வங்கியில் கொள்ளையடிக்கும் சீன், காவல்துறை உயர் அதிகாரியான லட்சுமிக்கு அவர் கொடுக்கும் கவுன்டர்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
🌹சுந்தர காண்டம்: தான் பயின்ற பள்ளியிலேயே தமிழ் ஆசிரியாக பணிக்கு சேரும் சண்முகமணி, முதல் நாளே அங்கு பயிலும் ப்ரியா என்ற மாணவியால் கேலி செய்யப்பட்டு இருவருக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்படுகிறது. இதுபோக அவருடன் பயின்ற ஒரு நண்பர் தற்போதும் அதே பள்ளியில் பயில்வது என படத்தின் லூட்டி பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்
🌹ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி: அரண்மனையில் புதியதாக மேனேஜராக வேலைக்கு செல்லும் பாக்யராஜ், மீனா தான் ராஜகுமாரி என அறியாமல் அவருடன் நக்கல், நையாண்டி செய்து கவனத்தை ஈர்த்து இருப்பார். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெறும் பாக்யராஜின் பாட்டி கதாபாத்திரம் க்ளைமேக்ஸில் அதகளப்படுத்தி இருக்கும்
🌹பவுனு பவுனுதான்: இளம் வயதிலேயே ஊரை விட்டு வெளியேறிய பாக்யராஜ் ராணுவத்தில் பணிக்கு சேர்கிறார். மீண்டும் ஊருக்கு திரும்புகையில் தனது அடையாளத்தை மறைத்து உறவினர்களுடன் பழக தொடர்கிறார். அப்போது சிறு வயது முதலே தன்னை காதலித்து வரும் பெண்ணுடன் சேர்வதே கதையாக இருக்கும் இதிலும் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது.
🌹ராசுகுட்டி: பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பொறுப்பற்ற நாயகன், தனது வாழ்க்கையில் சந்திக்கும் சோதனைகளைத் தாண்டி, எவ்வாறு அன்பையும் மரியாதையையும் வெல்கிறான் என்பதை மிகவும் நகைச்சுவையாக இந்த படம் காட்டியிருக்கும்
🌹மௌனகீதம்: தவறான புரிதல்களால் கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டையால் இருவரும் பிரிவது, பின்பு மீண்டும் எப்படி அவர்கள் சேர்கிறார்கள் என்பதே படத்தின் கதையாகும். நகைச்சுவையாக கூறப்பட்டு இருந்தால்லும், இன்றைய தேதிக்கும் இந்த படம் சரியாக பொருந்தும்.
🌹சின்ன வீடு: தான் மணந்த மனைவி தனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவர் இல்லை என்ற மமதையில் திரிய, அந்த பெண்ணின் உண்மையான நிலையை அறிந்த பிறகு பாக்யராஜின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை நகைச்சுவையாக இந்த திரைப்படம் வெளிக்காட்டி இருக்கும்
🌹இன்று போய் நாளை வா: ஒரு பெண்ணை நண்பர்களான மூன்று பேர் காதலிக்க, அதனால் அவர்களிடையே வரும் மோதல் மற்றும் சூழலை மிகவும் நகைச்சுவையாக இந்த திரைப்படம் மையக்கருவாக கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Srinivas
பாலு மகேந்திரா !
3 மனைவிகள், நிறைய வயது வித்தியாசம்... ஆனாலும் அன்பும் காதலும் தழும்பிய பாலு மகேந்திரா வாழ்க்கை
பாலு மகேந்திராவுக்கு அகிலா, நடிகை ஷோபா மற்றும் நடிகை மௌனிகா என மூன்று மனைவிகள்.
பாலு மகேந்திரா ஒளிப்பதிவாளர், இயக்குனர், கதாசிரியர், எடிட்டர் என பன்முகம் கொண்டவர்.
தமிழில் இவர் ஒளிப்பதிவு செய்த முதல் படம், முள்ளும் மலரும். 1979ல் இவர் இயக்கிய முதல் தமிழ் படம் "அழியாத கோலங்கள்'. பின், மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டை வால் குருவி, சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, அது ஒரு கனா காலம், தலைமுறைகள் உள்ளிட்ட 15 படங்களை இயக்கியுள்ளார். இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனர் பாலா, ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி ஆகியோர் இவரது பட்டறையில் உருவானவர்கள்.
பாலுமகேந்திரா தன்னுடைய முதல் மனைவி அகிலா குறித்து பேசியது, எனக்கு அகிலா மனைவியாக கிடைத்தது முன்ஜென்மத்தில் நான் செய்த புன்னியம். அகிலாவை நான் திருமணம் செய்யும் போது அவளுக்கு 18 வயது. சரியாக புடவை கூட கட்ட தெரியாது. அந்தளவுக்கு ஒரு வெகுளித்தனமான பெண். நாம் புராண காலத்தில் கண்ணகி, சீதை போன்ற பத்தினி பெண்களை பற்றி படித்து இருப்போம். அகிலாவும் அந்த மாதிரியான பெண் போல இருந்தவள். இந்த யுகத்தில் அவள் பிறந்திருக்க தேவையில்லை. அந்த அளவிற்கு அடக்கம், அமைதி, பொறுமை என பத்தினி பெண்களுக்கு தேவையான அனைத்து குணங்களையும் கொண்டவர்.
அகிலா செய்த பாவம் எனக்கு மனைவியாக அமைந்தது என்று கூறினார்.
பிறகு பாலு மகேந்திரா நடிகை சோபாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சோபா தன்னுடைய 17 வயதிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், அவருடைய மரணம் குறித்து பாலு மகேந்திரா கூறியது, தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த தேவதை என் மனைவி ஷோபா.
ஆனால், வந்த கொஞ்ச காலங்களிலேயே என்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள். அந்த தேவதையைப் பற்றி என்ன சொல்வது? என்ன எழுதுவது? அடுத்தவீட்டுப் பெண் போன்ற சராசரி தோற்றம் கொண்ட ஷோபா ஒரு அற்புதமான நடிகையாவார்.
ஷோபா என்ற அந்த வண்ணத்துப் பூச்சி எனது தோளிலும் சிறிது காலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்து போன அந்தச் சோகத்தை எப்படி சொல்வேன் என கூறியிருந்தார்.
ஆனால், பாலு மகேந்திராவுடன் இறுதிவரை வாழ்ந்தது நடிகை மௌனிகா தான். மௌனிகா பாலுமகேந்திராவை விட 30 வயது சிறியவள்.
பாலுமகேந்திரா மெளனிகா பற்றி கூறியது, கடந்த 1998-ஆம் ஆண்டு நாங்களிருவரும் மனப்பூர்வமாக கல்யாணம் செய்து கொண்டோம். மேலும், திருமதி பாலுமகேந்திரா என்று என்னை கூப்பிட்டாங்கனா! அகிலா அம்மாவுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். இதை என்னால புரிஞ்சுக்க முடிகிறது என மௌனிகா கூறினார்.
அந்த அளவிற்கு வெள்ளை மனது உடையவள். மேலும் தன் மூலம் ஒரு குழந்தை பெற்று கொண்டால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள் ஏற்படும் என்ற ஒரே காரணத்துக்காக தாய் ஆகவேண்டும் என்ற ஆசையை கூட தவிர்த்தவள். அந்த அளவிற்கு என் மனைவியையும் என்னையும் நேசித்தவர். அவள் மனைவியாக கிடைக்க நான் பெரும் பாக்கியம் செய்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
இணையப் பதிவு தேன் மொழி
Tuesday, October 13, 2026
பி. விட்டலாச்சார்யாவின் ஜெகன் மோகினி !
- ஜெகன் மோகினி 1978-ஆம் ஆண்டு வெளியான ஒரு பிரபலமான மாயாஜால திகில் திரைப்படம்.
- இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்:பி. விட்டலாச்சார்யா
- முக்கிய நடிகர்கள்: ஜெயமாலினி (ஜெகன் மோகினியாக), நரசிம்ம ராஜு (ராஜா), பிரபா (கௌரி - மனைவியாக) மற்றும் துளிபாலா
- இது 1951-ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான கன்னடத் திரைப்படத்தின் ரீமேக்.
- அந்த காலக்கட்டத்தில் பெரிய நட்சத்திரங்களின் படங்களை விடவும் இந்தப் படம் மிகப்பெரிய வசூல் சாதனையும், 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமான ஓட்டத்தையும் கண்டது.
- பின்னர் 2009-ஆம் ஆண்டில் இதே படம் தமிழில் நமீதா நடிப்பில் என். கே. விசுவநாதன் இயக்கத்தில் மீண்டும் எடுக்கப்பட்டது.
- ஜெகன் மோகினி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார்களின் படங்கள் மட்டுமே செய்யக்கூடிய பல சாதனைகளை இந்தப் படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் செய்து காட்டியது.
- மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த டாப் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது.
- தியேட்டர்களில் வாரக்கணக்கில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது அப்போதைய சினிமா விநியோகஸ்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
- இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு நடிகை ஜெயமாலினியின் நடிப்பு மற்றும் கவர்ச்சி மிக முக்கியக் காரணமாக அமைந்தது. இப்படத்திற்குப் பிறகு அவர் தென்னிந்திய சினிமாவில் மிகவும் தேடப்படும் ஒரு நட்சத்திரமாக மாறினார்.
- இயக்குனர் விட்டலாச்சார்யா கையாண்ட பட்ஜெட் கிராபிக்ஸ் மற்றும் ட்ரிக் ஷாட்டுகள் குழந்தைகளையும், குடும்பங்களையும் திரையரங்கிற்குள் ஈர்த்தது.
திரைக்கதை
- திருமணத்திற்கு முன்பு அரசரால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் ஜெகன் மோகினி, ஒரு ஆவியாக மாறி அந்த அரசன் மறுபிறவி எடுக்கும் போது அவனை பழிவாங்கவும் தன்வசப்படுத்தவும் முயல்கிறாள். மறுபிறவி எடுத்த ராஜாவையும், அவனது மனைவி கௌரியையும் ஆவியின் மாயாஜால மிரட்டல்களில் இருந்து எவ்வாறு காப்பாற்றுகிறார்கள் !
Monday, October 12, 2026
50 டிகிரி வெயில்... ஆனா ஒதுங்க ஒரு மர நிழல் கூட இல்லையே !
50 டிகிரி வெயில்... ஆனா ஒதுங்க ஒரு மர நிழல் கூட இல்லையே 🌳🔥
யோசிச்சு பாருங்க மக்களே, இன்னைக்கு பல ஊர்கள்ல வெயில் 50 டிகிரியை தொட்டுடுச்சு. வெளியே கால் வைக்க முடியல, ஒரு மர நிழல் கிடைக்காதான்னு தேடி அலையுறோம். ஆனா அந்த மரங்களை வெட்டி சாய்ச்சது நாமதானே?
இந்தியாவுல இப்போ ஒருத்தருக்கு வெறும் 0.06 ஹெக்டேர் காடுதான் மிச்சம் இருக்கு. இப்படியே போனா வருங்காலத்துல சூடு இன்னும் பயங்கரமா இருக்கும்.
ஏசியை போட்டுட்டு ரூமுக்குள்ள உட்கார்ந்தா தப்பிச்சிடலாம்னு நினைக்கிறோம். வெளியே பூமியே கொதிக்கும்போது ஏசி மட்டும் எத்தனை நாளைக்கு காப்பாத்தும்? கான்கிரீட் கட்டிடங் களுக்காக பசுமையை தொலைச் சிட்டோம், இப்போ அதுக்கான விலையை நாமதான் கொடுத்துட்டு இருக்கோம்.
நாளைக்கு நம்ம பசங்க இந்த வெயில்ல நிம்மதியா வாழணும்னா, இன்னைக்கே ஆரம்பிக்கணும். வீட்டுக்கு ஒரு மரம், தெருவுக்கு ஒரு செடின்னு சின்னதா ஆரம்பிப்போம்.
உங்க தெருவுல கடைசியா எப்போ மரம் நட்டீங்க?
Sunday, October 11, 2026
மேகமலை ! இயற்கை எழில் கொஞ்சும் "உயர் அலை அலையான மலைகள்" சூழ்ந்த அழகிய சுற்றுலா தலம்…
- மேகமலை தேனி மாவட்டத்தில் (சின்னமனூர் அருகில்) மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு மிக அழகான, அமைதியான மலைப்பிரதேசம்.
- எப்போதும் மேகங்கள் சூழ்ந்து தவழ்ந்து கொண்டிருப்பதால் இதற்கு "மேகமலை" என்று பெயர் வந்தது.
- இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலைப்பகுதி "உயர் அலை அலையான மலைகள்" (Highwavys Mountains) என்றும் அழைக்கப்படுகிறது.
- இது 'ஹைவேவிஸ்' என்றும், 'பச்சை குமாச்சி' என்றும் அழைக்கப்படுகிறது
மகாராஜா மெட்டு
- மேகமலையின் மிக உயர்ந்த வியூ பாயிண்ட் இது.
- இங்கிருந்து பார்த்தால் ஒட்டுமொத்த கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களின் 270 டிகிரி பிரம்மாண்டக் காட்சியை ரசிக்கலாம்.
ஹைவேவிஸ் அணை மற்றும் ஏரி:
- மேகமலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த அழகான ஏரி மற்றும் அணைப்பகுதி மாலை நேரங்களில் நடப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் மிகவும் உகந்தது.
- மணலாறு அணை, இரவங்கலாறு அணை என மொத்தம் ஐந்து சிறிய அணைகள் இப்பகுதியில் உள்ளன.
மேகமலை வனவிலங்கு சரணாலயம்:
- இது ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதி.
- அதிர்ஷ்டம் இருந்தால் இங்கு யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள் மற்றும் பல அரிய வகை பறவைகளைக் காண முடியும்.
சின்ன சுருளி நீர்வீழ்ச்சி:
- மேகமலை அடிவாரக் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மூலிகை நீர்வீழ்ச்சி.
- அடர்ந்த காடுகளுக்கு இடையே கொட்டும் இந்த அருவியில் குளிப்பது அலாதியான அனுபவம்.
செக்போஸ்ட் நேரம்:
- மேகமலை வனத்துறை செக்போஸ்ட் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.
- அதற்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் மேலே செல்லவோ அல்லது கீழே வரவோ அனுமதியில்லை.
- சின்னமனூரிலிருந்து 18 கொண்டைஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும்.
- இங்கு மற்ற கமர்ஷியல் மலைப்பிரதேசங்கள் போல அதிக கடைகளோ, உணவகங்களோ அல்லது ஏடிஎம் (ATM) வசதிகளோ கிடையாது. எனவே தேவையான தின்பண்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே எடுத்துச் செல்வது நல்லது.

