Total Pageviews

Tuesday, October 27, 2026

எஸ்வி.சுப்பையாவுக்கு இருந்த கலைத்தாகம்... கமல் சொன்ன அந்த ஆச்சரிய தகவல்!

 

kamal, sv.subbaiah

எஸ்வி.சுப்பையா எப்படிப்பட்ட நடிப்பாற்றல் கொண்ட அற்புதமான நடிகர் என்பது நாம் அறிந்த விஷயம். அப்படிப்பட்ட ஆற்றல் மிக்க நடிகரான எஸ்.வி.சுப்பையாவோடு அரங்கேற்றம் படத்தில் இணைந்து நடித்தார் கமல்ஹாசன். அவர் சுப்பையாவின் கலைத்தாகம் எப்படிப்பட்டது என்பது பற்றி பத்திரிகை ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

உலகத்திரைப்பட விழாக்கள் எங்கு நடந்தாலும் அங்கு சுப்பையாவைப் பார்க்கலாம். பெளினி படம் கூட அவர் பார்ப்பார். ஆனா அவரு பேரைக்கூட உச்சரிக்க அவருக்கு வராது. ஆனா அதுக்காக அப்படிப்பட்ட படங்களை எல்லாம் பார்க்க வராம இருக்க மாட்டாரு. அவருக்குப் புரியாத விஷயங்களை எல்லாம் பக்கத்தில இருக்குறவங்ககிட்ட கேட்டுத் தெரிந்து கொள்வார். அப்படிப்பட்ட ஒரு கலைத்தாகம் மிக்க மனிதராக வாழ்ந்தவர்தான் எஸ்.வி.சுப்பையா.

ஜெயகாந்தனோட பிரம்மா உபதேசம் என்ற நாவலை அவர் திரைப்படமாக எடுத்தார். ஆனால் அந்தப் படத்தை வெளியிட அவரால முடியல. அவர் வீட்டுப் பரண் மேல அந்தப் படத்துப் படப்பெட்டியைப் போட்டு வைத்து இருந்தார். இங்கே எஸ்.வி.சுப்பையா மாதிரி பல பேருக்கு கலைத்தாகம் இருக்கு. ஆனா அதுக்கேற்ற வசதி, வாய்ப்புகள்தான் இல்லை என்று அந்தப் பத்திரிகை பேட்டியில் தெரிவித்துள்ளார் கமல்.

இயக்குனர் செய்த அந்த வேலை... தாங்க முடியாத ஏக்கத்தில் மெல்லிசை மன்னர்கள்!

 

MSV, Ramamoorthi

தமிழ்சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்த இசை அமைப்பாளர் தான் மெல்லிசை மன்னர்களான எம்எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும்.

இவர்கள் இசை அமைப்பில் உருவான 100க்கணக்கான பாடல்கள் இன்றைக்கும் பல லட்சம் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாக உள்ளன. அப்படி எண்ணற்ற வெற்றிப் பாடல்களைத் தந்த இந்த இசை அமைப்பாளர்களுக்குப் பிடித்த பாடல் என்ன தெரியுமா?

காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் நாளாம் நாளாம் திருநாளாம். மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன், கலை இயக்குனர் கங்காவோடு இணைந்து பாக்யலட்சுமி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கி, அதன் சார்பில் ஸ்ரீதர் இயக்கத்தில் கலைக்கோயில் என்ற படத்தைத் தயாரித்தது பலருக்கும் தெரியும். முதலில் அந்தப் படத்தில் ஒரு இந்திப்பாடல் இடம்பெறுவதாக இருந்தது. அந்தப் பாடலை லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே ஆகிய இருவரது குரலில் பதிவு செய்ய வேண்டும் என்பது இவர்களது ஆசை.

ஆனால் கடைசி நேரத்துல அந்தக் காட்சியையே படத்தில் இருந்து தூக்கி விட்டார் இயக்குனர். எங்களுக்கு அந்த ஆசையை நிறைவேற்ற முடியலையே என்கிற ஏக்கம் பல ஆண்டுகள் இருந்தது என ஒரு பத்திரிகையில் பதிவு செய்துள்ளார் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி.

சூப்பர்ஸ்டாரின் 'ஜெயிலர் 2 திரைப்படம்…

 

  • நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' திரைப்படம் அக்டோபர் 15 வெளியானது.
  • 'ஜெயிலர் 2' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
  • இப்படத்தில், ரஜினிகாந்த் தனது புகழ்பெற்ற 'டைகர்' முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்துள்ளார்.
  • முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா, ரித்விக் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சூரஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், அன்னா ராஜன், ஜதின் சர்னா ஆகியோர் இணைந்துள்ளனர்.
  • மேலும், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரின் சிறப்புத் தோற்றங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

திரைக்கதை

  • தனது குடும்பத்தை கொலை செய்ய நினைத்த விநாயகனை, ரஜினிகாந்த் கொலை செய்வதுடன் ஜெயிலர் முதல் பாகம் முடிவடைந்தது. அதில் இருந்து இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது. சிலை கடத்தல் மன்னன் விநாயகனை கொலை செய்த பிறகு குடும்பத்துடன் கோவையில் செட்டிலாகி இருக்கிறார் ரஜினிகாந்த்.
  • விநாயகனை கொலை செய்த ரஜினிகாந்தை எப்படியாவது பழி தீர்க்க துடிக்கிறார் சூரஜ் வெஞ்சாரமூடு
  • இதற்கிடையில் சூரஜ் வெஞ்சாரமூடுவின் கூடாரத்தில் சேரும் ரஜினிகாந்த், அந்தக் கூட்டத்துக்கு உத்தரவுகளை பிறப்பித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவை நெருங்க நினைக்கிறார்.
  • இதன் காரணமாக ரஜினிகாந்தின் குடும்பத்துக்கு மீண்டும் சோதனைகள் ஏற்படுகிறது.
  • இக்கட்டான சூழலில் தனது குடும்பத்தை ரஜினிகாந்த் காப்பாற்றினாரா? எஸ்.ஜே.சூர்யா, ரஜினிகாந்தை பழிதீர்க்க துடிப்பது ஏன்? விநாயகனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பல கோடி மதிப்பிலான சிலைகள் எங்கே போனது? என்பதே இப்படத்தின் பரபரப்பான மீதி கதை".

Tuesday, October 20, 2026

தன்னம்பிக்கை என்றால் என்ன தெரியுமா?

 


நண்பர் ஒருவர் அனுப்பிய வாட்ஸ்ஆப் பதிவு இது. எழுதியவர் பெயர் இல்லை. எழுதிய பதிவர் இங்கு துபாயில்தான் இருக்கிறார்.இந்த பதிவு வாழ்க்கை பாடத்தை நமக்கு அளிக்கிறது.

தன்னம்பிக்கை என்றால் என்ன தெரியுமா?

காலை 7 மணிக்கு வழக்கம்போல் அலுவலகம் சென்ற நான், அதே நாளில் காலை 10.30 மணிக்கு “வேலை இல்லை” என்ற செய்தியுடன் வெளியே வந்தேன்.

அதுவும் எங்கே? Dubai. MD அவர்களே என்னை நான் தங்கி இருந்த இடத்தில் இறக்கி வைத்து,

“ஒரு மாதம் company accommodation-ல் தங்கி வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள்…” என்று சொல்லிவிட்டு சென்றார்.

பலருக்கு அது வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும்.

ஆனால் நான்? ஒரு நிமிஷம் கூட பதற்றப்படவில்லை. அமைதியாக உட்கார்ந்து யோசித்தேன்.

பல வருடங்களுக்கு முன் வேலை பார்த்திருந்த ஒரு பழைய நிறுவனத்தை தொடர்பு கொண்டு GM appointment கேட்டேன்.

அவர்கள் நேரம் கொடுத்தார்கள். போனேன்.

அந்த வேலை கிடைக்கவில்லை. ஆனால் வாழ்க்கை கதவுகளை மூடுவதற்கு முன், இன்னொரு கதவை திறந்து வைத்திருக்கும். அங்கே இருந்த ஒரு நண்பர் மூலம் இன்னொரு contact கிடைத்தது.

உடனே தொடர்பு கொண்டேன். “வாங்க பேசலாம்” என்றார். சென்று சந்தித்தேன்.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் பேசினோம். வெளியே வந்தபோது… கையில் Appointment Order. மறுநாள் பழைய முதலாளியை சந்தித்து, “வேறு வேலை கிடைத்துவிட்டது” என்று சொன்னபோது, ஒரே நாளில் வேலை மாறியதை கேட்டு அவருக்கே அதிர்ச்சி!

இதோ இன்னொரு சம்பவம்…

என் மகளின் நிச்சயதார்த்த தேதி முடிவாகி விட்டது. ஊருக்கு வர டிக்கெட் கூட போட்டுவிட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் கிளம்ப வேண்டும். அந்த நேரத்தில் மீண்டும் வேலை போனது. ஆனால் அப்போதும் நான் கலங்கவில்லை.

ஒரு வாரத்திற்குள் பலரை தொடர்பு கொண்டு புதிய வேலை ஏற்பாடு செய்துவிட்டு, எந்த சலனமும் இல்லாமல் ஊருக்கு வந்து நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்தேன். மீண்டும் துபாய் திரும்பி புதிய வேலையில் சேர்ந்தேன். அதற்குப் பிறகு மூன்றே மாதத்தில் மகள் திருமணத்திற்கு ஒரு மாத விடுமுறை கூட எடுத்தேன்.

இப்போது நினைத்தால்… “அது எல்லாம் எப்படி சாத்தியமானது?” என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கும். பதில் ஒன்று தான்:

“நான் என் மேல் வைத்திருந்த நம்பிக்கை.”

வாழ்க்கையில் பிரச்சனைகள் வராமல் இருக்காது. ஆனால் தன்னம்பிக்கை இருந்தால், பிரச்சனை நம்மை பயமுறுத்தாது. ஒரு முக்கியமான விஷயம்…

நான் சொன்ன இந்த இரண்டு சம்பவங்களும், சொல்லாமல் விட்ட இன்னும் பல சம்பவங்களும் — இன்று வரை என் குடும்பத்தினருக்கே தெரியாது.

ஏனென்றால்…

"சில போராட்டங்கள் சத்தமில்லாமல் வெல்லப்படுகின்றன.

அதற்குப் பெயர் தான் தன்னம்பிக்கை".

Monday, October 19, 2026

வெப்பமும்....வேண்டுகோளும் ! மரம் நடுவோம் ..

வெப்பமும்....வேண்டுகோளும்


இன்னும் பத்து வருடத்தில் வெயில் இப்போ உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும் அப்போ நம்மால் தாங்க இயலாது

குழந்தைகளைக் காப்பாற்று வதற்கு சிரமம்

இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் வெயிலால் கோடை கொப்பளம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது,

நம்ம வீட்டை சுற்றி இடமிருப்பி ன் முடிந்தளவிற்கு மரங்களை நடுங்கள்,

மரம் நடுவோம் ...

இயற்கையை காப்போம்

வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்போது தமிழகத்தில் 10 கோடி மர கன்றுகள் நட இப்போதே திட்டமிடுவோம்

மர கன்றுகள் உற்பத்தியாளர் கள்,வனத்துறை,பள்ளி தாளாளர்கள்,உயர்பதவிகளில் இருப்போர்,பிரபலங்கள்,ஆன்மீக தலைவர்கள்,அனைத்து மதங் களின் குருமார்கள், கிராம தலைவர்கள், ஊர் தலைவர்கள்,

அனைத்து கட்சி தலைவர்கள் ஒன்று கூடி செயல்படுவோம்.

அதற்கு இப்போதிருந்தே தயார் ஆகி கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு குழுவை இப்போதே உருவாக்கி கொள்ளுங்கள்

1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு சாதிக்க முடியும். ஒவ்வொரு மர கன்றிற் கும் அடுத்த 1 வருடம் தினமும் 1 லிட்டர் நீர் விட்டால் போதும்.

இதே போல் சில வருடங்கள் செய்தால், 2030 க்குள் தமிழகமும் குளிர்ந்து போகும்

அவரவர் ஊர்களில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் ஆகுங்கள். கிராமங்களில் இன்னும் அதிக மர கன்றுகள் நடுவதற்கு திட்டமிடுங்கள்.

இதற்கான வாட்ஸ்அப் குழுக்க ள் அந்தந்த ஊர்களில், கிராமங் களில் இன்றே துவங்குங்கள்.

மர கன்றுகள் நடுங்கள்

அல்லது மர கன்றுகள் வாங்கி கொடுங்கள் அல்லது மர கன்று கள் நட உதவுங்கள்.

மர கன்றுகள் தேவைக்கு உங்களுக்கு அருகில் உள்ள நாற்றுப் பண்ணைகளில், நர்சரிகளில் இப்போதே முன் பதிவு செய்யுங்கள்

பொது இடங்களில் -

1,புங்கன் மரம்

2,வெப்ப மரம்

3,ஆவி மரம்

4,அரச மரம்

5,குருவி பழம் என்ற சர்க்கரை பழம்,

லட்டு பழம்

இவைகளை வளர்ந்த கன்றுகளாக பார்த்து வாங்கி நடுவது நன்று. இதில் புங்கன் மரத்தை ஆடு மாடுகள் கடிக்காது

நீர் வழி தடங்கள் அருகில்

1,பூவரசு மரம்

2,பனை மரம்

பாதுகாப்பு உள்ள வீட்டு அருகில் உள்ள இடங்களில் அவரவர் விருப்ப மர கன்றுகள் நடலாம்.

1,கறிவேப்பிலை

2,லட்ச கொட்டை கீரை

3,தேக்கு

4,நாட்டு மா மரம்

5,நாட்டு பலா

6,நாட்டு அத்தி

7,குமிழ்

8,மகா கனி

9,மலை வேம்பு

போன்ற மரங்கள் நடலாம்

வழிபாட்டு தலங்கள் -

1,மர மல்லி

2,மகிழம் மரம்

3,மனோரஞ்சிதம்

4,பாரிஜாதம்

5,புன்னை மரம்

6,செண்பக மரம்

7,மருதாணி போன்றவற்றை நடலாம்

2030 இல் பச்சை பசேல் என்ற தமிழகம் உருவாக்குவோம்

இனி வரும் காலங்களில் உண்டாக இருக்கும் கோடை கால கடும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.

மக்களிடம் எடுத்து சொல்லுங்க ள். விழிப்புணர்வு செய்யுங்கள்.

மரகன்றுகள் நடுவதற்கு ஆவ ணி மாதத்தில் முதல்மழை பெய்ததும் 1நாள் பொதுவிடுமு றை அறிவிக்கவேண்டுகிறோம்

வெப்ப அலைகளுக்கெதிரான ஒரு போர் போல் தான் இதுவும்

ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்

நன்றே செய்வோம்.அதனை இன்றே துவங்குவோம்

பிடித்திருந்தால் காப்பி செய்து பதிவிட்டு இயற்கையை காக்க உதவுங்கள்...

------------------

Wednesday, October 14, 2026

தன்னம்பிக்கை கொள்வதின் முதல்படி எது ? தன்னை அறிவது!

தெரிந்தே இருந்தாலும் மீண்டும் ஒரு முறை பதிப்பித்துக் கொள்வோமே.
**********************


தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள்

 உயிரெழுத்துக்கள் 12

 மெய் எழுத்துக்கள் 18

உயிர்மெய் எழுத்துக்கள் 216

 ஆய்த எழுத்து 1

மொத்த எழுத்துக்கள் 247

 உயிர் நெடில் 
உயிர் குறில் 

மடைதிறந்த வெள்ளம் போல தமிழை பேச வேண்டும்

இது எனது விருப்பம் . நன்றி !

பதினாறு பேறுகள் - 16

1-புகழ்
2-கல்வி
3-ஆற்றல்
4-வெற்றி
5-நன்மக்கள்
6-பொன்
7-நெல்
8-நல்லூழ்
9-நுகர்ச்சி
10-அறிவு
11-அழகு
12-பொருமை
13-இளமை
14-துணிவு
15-நோயின்மை
16-வாழ்நாள்

நவதானியங்கள் -9

1-உளுந்து
2- எள் 
3-கடலை 
4-கொள்ளு
5- சாமை 
6-தினை 
7-அவரை
8- நெல்
9-பயிறு

நவகிரகங்கள்-9

1-சந்திரன்
2- சூரியன் 
3-செவ்வாய் 
4-புதன் 
5-வியாழன் 
6-வெள்ளி
7- சனி
8- ராகு 
9-கேது

நவமணிகள்  -9

1-கோமேதகம்
2-நீலம்
3-பவளம்
4-புட்பராகம்
5-மரகதம்
6-மாணிக்கம்
7-முத்து
8-வைரம்
9-வைடூரியம் 

கடையெழு வள்ளல்கள் -7

1-பாரி
2-வல்வில்ஓரி
3-மலையமான் திரு முடிக்காரி
4-ஆய்ஆண்டிரன்
5-நள்ளி
6-அதியமான்
7-பேகன் 

ஏழு பிறப்பு -7

1-தேவர்
2- மனிதர்
3- விலங்கு
4- பறவை
5- ஊர்வன
6- நீர்வாழ்வன
7- தாவரம்

பெண்களின் ஏழு பருவங்கள்- 7

1-பேதை
2-பொதும்மை
3-மங்கை.
4-மடந்தை
5-அரிவை
6-தெரிவை
7-பேரிளம்பெண்

அறுசுவை -6

1-உவர்ப்பு
2-துவர்ப்பு
3-கார்ப்பு
4-கசப்பு
5-இனிப்பு
6-புளிப்பு

பஞ்சா மிர்தம் -5

1-சர்க்கரை 
2-தயிர் 
3-தேன்
4- நெய்
5- பால்

பஞ்ச பாண்டவர் -5

1-தர்மன்
2- வீமன்
3- அர்ச்சுனன்
4-நகுலன்
5- சகாதேவன்

ஐம்பால் -5

1-ஆண்பால்
2-பெண்பால்
3-பலர்பால்
4-ஒன்றன்பால்
5-பலவின்பால்

ஐம்பொன் -5

1-பொன்
2-வெள்ளி
3-இரும்பு
4-ஈயம்
5-செம்பு

பஞ்சசீலம் ( ஐந்து ஒழுக்கங்கள்) -5

1-கொல்லாமை
2- பொய் சொல்லாமை 
3-திருடாமை 
4-காமமின்மை
5- பிச்சை யெடுக்காமை

ஐம்பெருங்காப்பியங்கள் -5

1-சீவக சிந்தாமணி
2-சிலப்பதிகாரம்
3-மணிமேகலை
4-வளையாபதி
5-குண்டலகேசி

ஐந்திலக்கணம் -5

1-எழுத்திலக்கணம்
2-சொல்லிலக்கணம்
3-பொருளிலக்கணம்
4-யாப்பிலக்கணம்
5-அணியிலக்கணம்

ஐந்திணை -5

1-குறிஞ்சித்திணை
2-முல்லைத்திணை
3-மருதத்திணை
4-நெய்தல் திணை
5-பாலைத் திணை

ஐம்புலன் -5

1-மெய்
2-வாய்
3-கண்
4-மூக்கு
5-செவி

ஐம்பெருங்குரவர் -5

1-அரசன்
2-ஆசிரியர்
3-தாய்
4-தந்தை
5-தமையன்

ஐம்பெரும் பூதங்கள் -5

1-நிலம்
2-நீர்
3-நெருப்பு
4-காற்று
5-ஆகாயம்

பஞ்ச மா பாதகம் -5

1-திருடுதல்
2-கள்ளுண்ணால்
3-குருநிந்தை
4-கொலை செய்தல்
5-பொய் சொல்லுதல்

பஞ்சவர்ணம் ( ஐந்து நிறங்கள்) -5

1-கருமை 
2-செம்மை 
3-பச்சை 
4-மஞ்சள் 
5-வெண்மை

நால்வகை வருணம் -4

1-அரசர்
2-அந்தணர்
3-வணிகர்
4-வேளாளர்

நால்வகை மகளிர் பண்புகள் -4

1-அச்சம்
2-மடம்
3-நாணம்
4-பயிர்ப்பு

நால்வகைப்பா -4

1-வெண்பா
2-ஆசிரியப்பா
3-கலிப்பா
4-வஞ்சிப்பா

நால்வகைப் படை -4

1-தேர்ப்படை
2-யானைப்படை
3-குதிரைப்படை
4-காலாட் படை

முக்காலம் -3

1-நிகழ்காலம்
2-இறந்தகாலம்
3-எதிர்காலம்

முச்சங்கம் -3

1-முதற்சங்கம்
2-இடைச்சங்கம்
3-கடைச்சங்கம்

முத்தமிழ் -3

1-இயல் தமிழ்
2-இசைத்தமிழ்
3-நாடகத் தமிழ்

முந்நீர் -3

1-ஆற்றுநீர்
2-ஊற்றுநீர்
3-மழைநீர்

முப்பால் -3

1-அறத்துப்பால்
2-பொருட்பால்
3-இன்பத்துப்பால்

மும்முரசு  -3

1-மங்கல முரசு
2-வெற்றி முரசு
3-கொடை முரசு

மூவேந்தர் -3

1-சேரர் 
2-சோழர்
3- பாண்டியர்

இருவினை -2

1-நல்வினை
2-தீவினை

தன்னம்பிக்கை கொள்வதின் முதல்படி எது
 தன்னை அறிவது!

16 வயதினிலே !


'16 வயதினிலே' படத்திற்காக ஸ்ரீதேவியைச் சந்திக்க அவரது வீட்டுக்கே சென்று கதையைச் சொன்னேன். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் விரிவாக எடுத்துரைத்தேன். அப்போது ஸ்ரீதேவியின் கண்கள் என்னை ஏதோ ஒரு விதத்தில் ஈர்த்தன. கதையின் கடைசிக் காட்சியைச் சொல்லி முடிக்கும் வரை, அவரது கண்களிலிருந்து என் பார்வையை விலக்க முடியாமல் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன்.

என் படத்தில் வரும் மயிலு கதாபாத்திரம் முழுக்க முழுக்க அசலான கிராமத்துப் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால், தலையில் விக் வைக்கக் கூடாது என்று சொன்னதும், ஸ்ரீதேவி ஆச்சரியத்துடன், “என்ன சார் சொல்றீங்க?” என்று கேட்டார். 

அதற்குப் பிறகு முகத்துக்கு மேக்கப் போட வேண்டாம் என்றும், காட்டன் துணியில் தைக்கப்பட்ட பாவாடையைத்தான் அணிய வேண்டும் என்றும் கூறினேன். நான் சொல்லச் சொல்ல, ஸ்ரீதேவிக்கும் அவரது அம்மாவுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் ஏற்பட்டது. ஒருவழியாக, இறுதியில் ஸ்ரீதேவி அந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்தார்.

அதன்பிறகு கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி என மூன்று முக்கிய நட்சத்திரங்களும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். என்னுடைய தயாரிப்பாளர் ராஜ்கண்ணு ஆரம்பத்தில் இந்தப் படத்தைக் கறுப்பு வெள்ளையில் எடுத்தால் போதும் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால், நட்சத்திரங்கள் ஒப்பந்தமான பிறகு, படத்தை வண்ணத்தில் தயாரிக்க முடிவெடுத்தார்.

படப்பிடிப்புக்காகக் கர்நாடகத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றோம். அங்கே தங்குவதற்குப் போதிய வசதிகள் எதுவுமே இல்லை. கமல்ஹாசனுக்கும் ஸ்ரீதேவிக்கும் மட்டும் தனித்தனியாக அறைகள் கிடைத்தன. நானும் ரஜினிகாந்தும் ஒரு வராண்டாவில் பாயை விரித்துப் படுத்துத் தூங்கினோம். 

அந்தக் காலத்தில் ரஜினிக்கு ஓய்வு என்பதே கிடையாது. இருபத்து நான்கு மணி நேரமும் ஏதாவது ஒரு படப்பிடிப்பில் நடித்துக்கொண்டே இருப்பார்.
எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்று, ஸ்ரீதேவி வெள்ளைத் தாவணி அணிந்துகொண்டு, 'செந்தூரப்பூவே...' 

பாடலுக்கு உதட்டசைத்து நடித்த காட்சி. பாடல் வரிகளுக்கு ஏற்றபடி அவர் நடித்ததைப் பார்த்தபோது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்தப் பாடலைப் பாடியதற்காகப் பாடகி எஸ். ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது என்பது தனியாகச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம்.

கர்நாடகக் கிராமத்தில் இருந்த ஒரு சிறிய வீட்டில் படமாக்கப்பட்ட காட்சியும் எனக்கு மறக்க முடியாதது. “மயிலு ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, நாயி மட்டும் வளர்க்கல, இந்தச் சப்பாணியத்தானே வளர்த்தா...” என்ற வசனம் அந்தப் படத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்தியது. 

அந்த வசனத்தை எழுதியவர் கலைமணி. சப்பாணியாக நடித்த கமல்ஹாசனும், மயிலாக நடித்த ஸ்ரீதேவியும் அந்தக் காட்சியில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர்.

அந்தப் படத்தை இயக்கிய காலகட்டத்தில் கமல்ஹாசன் ஏற்கெனவே பெரிய நடிகராக இருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.29,000. ஸ்ரீதேவிக்கு ரூ.9,000 சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. ரஜினிகாந்தின் சம்பளம் ரூ.3,000 மட்டுமே. 

Sridevi Bharathiraja