Total Pageviews

Tuesday, December 31, 2024

ஏ. ஆர். ரஹ்மானின் இசை ஆசிரியர் எஸ். கிருஷ்ணமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட மதன் பாப்.

 

ஏ. ஆர். ரஹ்மானின் இசை ஆசிரியர் மதன் பாப்.

எஸ். கிருஷ்ணமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட இவர், மதன் பாப் என்று பரவலாக அறியப்படும் திரைப்பட நகைச்சுவையாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.

காமெடி நடிகர் மதன் பாபின் உண்மையான பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவர் உண்மையில் ஒரு இசைக்கலைஞர். ஆஸ்கர் புயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசை ஆசிரியர் இந்த மதன் பாபு என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

மதன்பாபு 1950 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவரது குடும்பத்தில் இவர் எட்டாவது குழந்தை ஆவார். 1984ஆம் ஆண்டு நீங்கள் கேட்டவை என்ற பாலு மகேந்திராவின் படத்தில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார்.

நீங்கள் கேட்டவை, வானமே எல்லை, உடன் பிறப்பு, தேவர் மகன், புள்ளக்குட்டிக்காரன், ஜதி மாலை, உழைப்பாளி, நம்மவர், மகளிர் மட்டும், சதி லீலாவதி, பூவே உனக்காக, ப்ரியம், சுந்தர புருசன், கோபுரதீபம், சாச்சி 420, நேருக்கு நேர், ரோஜா மலரே, விவசாயி மகன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், காதலா காதலா, ஜூலி, நீ வருவாய் என, எதிரும் புதிரும், ஆனந்த பூங்காற்றே, உனக்காக எல்லாம் உனக்காக, உன்னை தேடி, துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் கேட்டுப்பார், கண்ணுக்குள் நிலவு, தெனாலி, ரிசி, பெண்ணின் மனதைத் தொட்டு, பார்த்தாலே பரவசம், லூட்டி, பிரண்ட்ஸ், அள்ளித்தந்த வானம், காமராசு, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, கிருஷ்ணா கிருஷ்ணா, புன்னகை தேசம், ஜெமினி, வில்லன், யூத், நள தமயந்தி, பிரியமான தோழி, தித்திக்குதே, விஷ்வதுளசி, பம்மல் கே. சம்பந்தம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், ஜெய் ராம், ஏபிசிடி, கற்க கசடற, ஐயா, மழை, ஜித்தன், குஷி, ஜெர்ரி, ஆதி, வரலாறு, முதன் முதலாய், மருதமலை, தொட்டால் பூ மலரும், வேல், அறை எண் 305ல் கடவுள், சேவல், ஐந்தாம் படை, பாரமரம், ஆனந்த தாண்டவம், தீ திரைப்படம், எங்கள் ஆசான், சுறா, பெண் சிங்கம், காவலன், மாப்பிள்ளை, பத்தாயிரம் கோடி, சிங்கம் 2, எதிர்நீச்சல், துள்ளி விளையாடு, சாகசம்

ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

No comments:

Post a Comment