மதிய சாப்பாடு லேட்... அந்த 'கேப்'பில் இளையராஜா போட்ட 13 டியூன்... மெகா ஹிட் சின்னத்தம்பி பாடல்கள் பின்னணி!
மதிய உணவு வர தாமதமான அந்த இடைவெளியில் இசையமைப்பாளர் இளையராஜா 13 டியூன்கள் போட்டு அனைத்து பாடல்களையும் ஹிட் அடித்துள்ளார்.
80-90-களில் இசை உலகின் ராஜாவாக திகழ்ந்த இசையமைப்பாளர் இளையராஜா அந்த காலக்கட்டத்தில் பல படங்களுக்கு இசையமைத்திருந்த நிலையில், தனக்கு மதிய உணவு வர தாமதமானதால் இந்த இடைவெளியில் ஒரு பெரிய வெற்றிப்படமான சின்னத்தம்பி படத்திற்கு டியூன்களை ரெக்கார்டிங் செய்து கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் பி.வாசு. தமிழ் மட்டுமல்லாமல் கன்னடத்திலும் பிரபல இயக்குனராக வலம் வரும் இவர், கடந்த 1991-ம் ஆண்டு இயக்கிய படம் சின்னத் தம்பி. பிரபு, குஷ்பு மனோரமா, ராதாவி, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் வெகுளியாக சுற்றும் ஹீரோ, வீட்டை விட்டு வெளியே போகமால், வீட்டுக்குள் வைத்து வளர்க்கப்படும் கூண்டுக்கிளாயாக இருக்கும் ஹீரோயின் ஆகிய இருவருக்கும் இடையே மலரும் காதல் அதனால் ஏற்படும் பிரச்னைகள் தான் இந்த படம். தமிழில் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம், தெலுங்கு, கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
இந்த படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா. 90-களில் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்த இவர், அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்த நேரத்தில் தனது சின்னத்தம்பி படத்திற்காக இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று இயக்குனர் பி.வாசு கேட்டுள்ளார். அன்றைய தினம், இளையராஜாவுக்கு மதிய சாப்பாடு வர தாமதமாகியுள்ளது. அப்போது என்னயா சுட்சிவேஷன், சொல்லு பார்க்கலாம் என்று இளையராஜா சொல்ல, பி.வாசு கதையை கூறியுள்ளார்.
கதை முழுவதையும் கூறிவிட்டு, இசை இங்கே அமைக்கலாமா இல்லை ஆழியாரில் வைத்துக்கொள்ளலாமா என்று பி.வாசு கேட்க, எங்கே இசை அமைத்தாலும், அந்த படத்திற்கு என்ன அமையுமோ அது தான் அமையும். பாடல் எங்கே வருகிறது என்று சொல் என இளையராஜா கேட்க, பி.வாசு பாடல் வரும் சூழ்நிலை குறித்து கூறியுள்ளார். இதை கேட்ட இளையராஜா சிறிது நேரத்தில் 13 டியூன்களை போட்டு, அந்த கேசட்டை பி.வாசுவிடம் கொடுத்துள்ளார். படத்திற்கு எங்கு இசை அமைத்தாலும் உன் கதைக்கு இதுதான் டியூன் என்று கூறியுள்ளார். அப்படி உணவு இடைவேளையில் உருவான பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
தேன் மொழி
No comments:
Post a Comment