- கர்நாடகாவின் தலைகாவிரியாக உருவெடுத்து ஒற்றை காவிரியாக வரும் ஆறானது இவ்விடத்தில் மூன்று முனையிலும் ஆறாக பிரிவதால் முக்கொம்பு என பெயர் பெற்றது.
- திருச்சியின் முக்கிய சுற்றுலா தலமாக முக்கொம்பு திகழ்கிறது.
- முக்கொம்பில் சிறந்த பொழுதுபோக்கு பூங்கா சிறுவர் பூங்கா,செயின்ட் வீல் ராட்டினம், சறுக்கு விளையாட்டு, படகு போக்குவரத்து போன்றவை அமைந்துள்ளது.
- அருகில் கரிகாலச்சோழன் புகழை இன்று வரை சுமந்து நிற்கும் கல்லனணை உள்ளது.
- பூங்காக்களில் உள்ள மரத்தடிகளில் அமர்வதற்கு ஆங்காங்கே சிமெண்ட் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியில் படகு சவாரி செய்வது இனிமையாக இருக்கும்.
- அருகில் உளள காவிரி ஆற்றில் குளித்து மகிழ்வது அதைவிட சிறப்பு சுடச்சுட மிளகாய் பஜ்ஜி டீ போன்றவை கிடைக்கும்.
- காவிரி ஆற்றில் மீன் பிடிப்பது இங்குள்ள சிறப்பு அம்சமாகும். நமக்கு காவிரி ஆற்றில் இருந்து மீன் பிடித்து சுடச்சுட வருத்து தருவார்கள். மிகவும் சுவையாக இருக்கும்.
- சுற்றுலா இடம் தேடி எங்கெங்கோ செல்பவர்கள் முக்கொம்பு சுற்றுலா சென்று வந்தால் மனதுக்கு இதமாக இருக்கும்.
- அப்படியே அருகில் உள்ள கல்லணை,திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்,திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவில் என இவற்றையும் பார்வையிட்டு மகிழலாம்.
பொது அறிவு தகவல்கள் / செய்திகள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்
Total Pageviews
Friday, August 28, 2026
காவிரி ஆற்றில் குளியல்,சுடச்சுட மிளகாய் பஜ்ஜி, டீ,ஆற்று மீன் வறுவல்,பூங்கா,படகு சவாரி என மனதை இலகுவாக்கும் சுற்றுலாத்தலம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment